மகளிர்மணி

பொங்கல் ஸ்பெஷல்... 

DIN

சர்க்கரை வள்ளி கிழங்கு(சீனி கிழங்கு) சிப்ஸ்


தேவையானவை:

சர்க்கரை வள்ளி கிழங்கு - 200 கிராம்
எண்ணெய் - 100 மில்லிகிராம்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகு தூள் - தேக்கரண்டி

செய்முறை :

கிழங்கை நன்கு சுத்தம் செய்த பின்னர், தோலை நீக்கிவிட்டு சிப்ஸ் கட்டையில் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். பொரித்த சிப்ஸில் தேவையான உப்பு, மிளகு தூள் கலந்து பரிமாறவும். இது உருளை சிப்ஸ்க்கு ஒரு நல்ல மாற்று.

-சுந்தரி காந்தி

சேமியா இனிப்புப் பொங்கல்


தேவையானவை:

சேமியா - 200 கிராம்
பாசிப்பயறு - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
நெய் - 1 கரண்டி
முந்திரிப்பருப்பு - 5
திராட்சை - 5
ஏலக்காய் - 2
கிராம்பு - 2

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் பாசிப்பயறை வறுத்து வேக வைத்து கொள்ள வேண்டும். வெல்லத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பதமானவுடன் அதோடு சேமியா, வேகவைத்த பயறு சேர்த்து நன்றாக கலக்கி நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை, பொடிசெய்த கிராம்பு, பொடி செய்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கிளறி கீழே இறக்கவும்.

அவல் பொங்கல்


தேவையானவை:

அவல் - 200 கிராம்
பால் - 200 மில்லி
நெய் - 100 மில்லி
சர்க்கரை - 50 கிராம்
வெல்லம் - 100 கிராம்
முந்திரி - 10
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 மூடி

செய்முறை:

அவல் காய்ச்சிய பாலில் ஊறவைத்து வெல்லத்தை பாகாக காய்ச்சி அதில் அவலைப் போட வேண்டும். முந்திரியையும் தேங்காய்த் துருவலையும் நெய்யில் வறுத்து அவலில் போட வேண்டும். ஏலப்பொடி கலக்கவும். சர்க்கரையை கலந்து பரிமாறவும்.

- ஆர்.ஜெயலட்சுமி

அரிசி வெல்லப் பாயசம்


தேவையானவை:

பால் - 1 லிட்டர்
அரிசி - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
பொடித்த முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப

செய்முறை:

நான்ஸ்டிக் பேனில் , சிறிதளவு தண்ணீர் மற்றும் பால் சேர்க்கவும். பால் கொதித்தவுடன் இரண்டு நிமிடம் கழித்து ஊறவைத்த அரிசியைப் பாலில் சேர்க்கவும். கொதிக்கும் பாலில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அரிசியை நன்றாக வேகவிடவும். அரிசி வெந்தவுடன், அடுப்பை அணைத்து, பாலை ஆறவிடவும். பின்னர், வேறொரு பேனில், சிறிதளவு நெய் சேர்த்து, முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். அதே பேனில் சிறிது தண்ணீர்விட்டு பொடித்த வெல்லத்தைச் சேர்த்து பாகு பதத்திற்கு வரும்வரை நன்றாகக் காய்ச்சவும். பிறகு அடுப்பை அணைத்துவிடவும். வெல்லக்கலவை அறைவெப்பநிலைக்கு வந்தவுடன் பால் மற்றும் அரிசிக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: வெல்லப்பாகு மற்றும் பால் ஆகிய இரண்டும் நன்கு ஆறியபின் மட்டுமே இரண்டையும் ஒன்றாகக் கலக்க வேண்டும். இல்லையேல் பால் திரிந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

பூசணிக்காய் பொரியல்

தேவையானவை:

மஞ்சள் பூசணிக்காய் - 1 கிண்ணம்
(நறுக்கியது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
துருவிய தேங்காய் - சிறிது
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - சிறிது

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு பூசணியை சேர்த்து வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது நீர் தெளித்து ஒரு முறை கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.

இறுதியில் துருவிய தேங்காயைச் சேர்த்து புரட்டி இறக்கினால், சுவையான பூசணிக்காய் பொரியல் தயார்.

-தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT