மகளிர்மணி

கரும்பின் மருத்துவ குணங்கள்!

13th Jan 2021 06:00 AM |  - ரிஷி

ADVERTISEMENT


கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துகள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலை ஊட்டச்சத்து குறைபாடின்றி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் தன்மை கரும்புக்கு உண்டு.

கல்லீரல் செயல்பாடுகளில் கோளாறு மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவை மஞ்சள் காமாலையை உண்டாக்கும்.  கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளதால் அவ்வப்போது, கரும்பு சாறுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால்  மஞ்சள் காமலை வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.  

உடலில் உள்ள சிறுநீரக குழாய், செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரி செய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், சரியாகி
விடும்.

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். கரும்புச்சாறு  சிறுநீரக கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மையுடையது. தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்து வந்தால், கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

ADVERTISEMENT

உடல் எடையை குறைக்க விரும்புவோர் அடிக்கடி  கரும்பு சாறை அருந்தி வர விரைவில்  பலன் கிடைக்கும்.

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்று குடிக்கலாம். மேலும் கோடைக்காலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது. 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT