மகளிர்மணி

பழைய  திரைப்படங்களை விரும்பி பார்ப்பேன்!

13th Jan 2021 06:00 AM |   - அருண்

ADVERTISEMENT

 

""நடிகையாக மட்டுமின்றி திரைப்பட ரசிகையான எனக்கு பழைய திரைப்படங்களை பார்ப்பது பிடிக்கும். இந்தியத் திரைப்படங்களைப் பொருத்தவரை இந்திய கலாசாரம், மதம், ஆன்மிகம் ஆகியவைகளை சார்ந்து இருப்பதால், இதுபோன்ற படங்களை பாதுகாத்து வைப்பது எதிர்காலத்தில் திரைத்துறையினருக்கு உதவும். பல நல்ல படங்களை பாதுகாக்க தவறியது வருத்தமாக இருக்கிறது. பழைய நடிகர் - நடிகைகளின் நடிப்பைப் பற்றி தெரிந்து கொள்வது நல்ல அனுபவம். திரைப்படங்கள் பொழுது போக்குக்காக மட்டுமின்றி வாழ்க்கையில் நம்பிக்கை, அன்பு, துணிவு, மகிழ்ச்சி போன்றவைகளை அளிப்பதோடு, நம் சமூகத்தையும் கட்டுகோப்பாக வைக்க உதவுகிறது என்பதால் நல்ல திரைப்படங்களை பாதுகாத்து வைக்கும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் சிவேந்திர சிங் துர்காபுர் என்பவர் "பிலிம் ஹெரிடேஜ்' பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அதில் நானும் ஒரு உறுப்பினராக சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் பாலிவுட் நடிகை சோனம் கபூர் அஹூஜா.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT