மகளிர்மணி

சமையலறை: சில முக்கிய டிப்ஸ்!

24th Feb 2021 06:00 AM | - எம். ஏ. நிவேதா

ADVERTISEMENT


பால் சேர்க்காமல் தயாரிக்கப்படும் டீ  இதயநோய், புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

*இனிப்புப்  பலகாரத்திற்குப் பாகு தயாரிக்கும் போது, பாகு கொதித்து வரும்போது, சில துளி பால்விட்டால் அழுக்கு தனியாக பிரிந்துவிடும்.

*தேங்காய் பர்ஃபி செய்யும் போது சர்க்கரையை அப்படியே சேர்க்காமல் மிக்ஸியில் நன்றாகப் பொடிசெய்து சேர்த்தால் சாப்பிட மிருதுவாக இருக்கும்.

*பருப்பு குழம்புக்கு தாளிக்கும் போது சிறிது சீரகமும் பூண்டும் தட்டிச் சேர்த்தால் மணமும் ருசியும் சூப்பராக இருக்கும்.

ADVERTISEMENT

*தயிரில் வெண்ணெய் எடுக்க மிக்சியில் ஐஸ் கட்டிகளை சேர்த்து அடித்தால் வெண்ணெய் நன்றாகத் திரண்டு வரும்.

*கோதுமை, ரவை உப்புமா செய்யும்போது தண்ணீருடன் ரவை சேர்த்து நன்றாக கொதித்து வரும்போது, தேங்காய்த் துருவல் சேர்த்து வெந்ததும் இறக்கி விட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

*பாத்திரங்களில் உள்ள தேநீர் கறையைப் போக்க, சிறிது வினிகர் மற்றும் உப்பு சேர்த்து கழுவினால் பளிச்சிடும்.

*பருப்பு, காய்களை வேக விடும் போது சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். இது சாம்பாருக்கு நிறத்தையும், சுவையையும் கூட்டுகிறது.

*பெரிய வெங்காயத்தை விட சிறிய வெங்காயத்தில் தான் சுவையும் சத்தும் அதிகம்.

*சமையலுக்கான காய்கறிகளை சட்டியில் போட்டு கழுவக் கூடாது குழாயில் நேரடியாகதான் கழுவ வேண்டும்.

*சமையலறையை மூன்று நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

*சமையலறையில் துருப்பிடித்த அரிவாள்மனை, கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது

*வாடிய பழைய காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

*சமையலறையில் பல்லி, கரப்பான் போன்ற பூச்சிகள் வராமல் பராமரித்தால் அங்கு தயாரிக்கப்படும் உணவுகளும் சுகாதாரமாக இருக்கும்.

Tags : cook
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT