மகளிர்மணி

கதம்பம்!

24th Feb 2021 06:00 AM

ADVERTISEMENT


மிச்சேல் ஒபாமாவின் ஆரோக்கியத் தொடர்!


பாஸ்ட் புட், ஜங்க் புட் எனும் நவீன கலாசார மோகத்தில் மூழ்கிக் கிடக்கும், ஒவ்வொரு குழந்தையும் அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான உணவு பழக்கத்தின் அவசியத்தை உணரவேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, நெட்ஃப்ளிக்ஸ் மூலம் தொடர் ஒன்றை தொடங்கவுள்ளார். இதன் முதல் நிகழ்ச்சி மார்ச் 16-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரில் மிச்சேல் ஒபாமா விசித்திரமான பல்பொருள் அங்காடியின் உரிமையாளராகவும் நடிக்கிறார். இதற்காக இவர், தனது கணவர் ஒபாமாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளாராம்.

பொம்மைகளும் கேரக்டர்களாக இருப்பதால் குழந்தைகளைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து மிச்சேல் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். குழந்தைகளும் அவர்களின் குடும்பங்களும் எங்களுடன் இந்தத் தேடலில் இணைந்து, உலகெங்கும் உள்ள பலபல சுவையான உணவு வகைகளைச் சமைத்தும் சாப்பிட்டும் களிப்படையப் போகிறார்கள்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், என் நண்பர்களான பல பிரபலங்களும், சமையல்கலை நிபுணர்களும், வீட்டுச் சமையலில் கலக்குபவர்களும் குழந்தைகளும் பங்கேற்க உள்ளனர்.

மேலும், இந்நிகழ்ச்சி வருங்காலங்களில், பெண்களுக்கான கல்வித்திறன் வளர்த்தலை முன் நிறுத்தும். வறுமையில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பையும் கையிலெடுக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

 

முதல் பெண் தலைவர்!

சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ஏற்றுமதி வரி உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 1995- ஆம் ஆண்டு முதல் உலக வர்த்தக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் 164 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதன் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணிகள் அண்மையில் நடைபெற்று வந்தன.

தற்போது, உலக வர்த்தக அமைப்பின் தலைவராக நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர், உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

இது குறித்து நிகோஸி கூறுகையில், ""கரோனாவினால், ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி மற்றும் சுகாதார பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தி மீண்டும் அதனை மீட்டெடுப்பதே தனது முதன்மை பணி'' என தெரிவித்துள்ளார்.

 

லட்சுமி நந்தன் மேனன்!

கேரளாவில் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற கல்வியாளராக விளங்கிய ராம வர்மா தாம்பன் என்பவரது மகளாகப் பிறந்தவர் லட்சுமி. இவர், பாட்னா மற்றும் திருவாங்கூர் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக இருந்த நந்தன் மேனனைத் திருமணம் செய்து கொண்டார்.

சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டவர். மத்திய அமைச்சரவையில் பலமுறை அமைச்சராக இருந்து வந்த லட்சுமி, ஐ.நா. சபைக்கு இந்தியப் பிரதிநிதியாகவும் சென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.

சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய லட்சுமிமேனன் பெண்களின் நிலைமை (டர்ள்ண்ற்ண்ர்ய் ர்ச் ஜ்ர்ம்ங்ய்) என்ற நூலை எழுதியுள்ளார். அவரது சேவையைப் பாராட்டி அரசு அவருக்குப் பத்மபூஷன் விருது அளித்துக் கௌவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT