மகளிர்மணி

யாழ்ப்பாணம் சொதி 

24th Feb 2021 06:00 AM | - இல. வள்ளிமயில், திருநகர்.

ADVERTISEMENT


தேவையானவை:

தேங்காய் (பெரியது) -1
உருளைக்கிழங்கு - 1
சாம்பார் வெங்காயம் - 7
எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
எண்ணெய் , உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ருளைக்கிழங்கைத் தோல் சீவி, சிறிது அளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தேங்காயைத் துருவி கெட்டியான பாலை எடுக்கவும். முதலில் கெட்டியான பால் ஒரு கப் கிடைக்கும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து, இரண்டாம் பாலையும் பிழிந்தெடுக்கவும்.

ADVERTISEMENT

இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் எடுத்த பாலை ஒன்றாகச் சேர்க்கவும். மூன்று கப் அளவுக்கு இந்தப் பால் இருக்கும். இல்லையென்றால், சிறிதளவு நீரைச் சேர்த்து மூன்று கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பச்சைமிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து சில விநாடிகள் வதக்கவும். பின்னர், வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து, சற்று வதக்கி, அதனுடன் இரண்டாம், மூன்றாம் முறை எடுத்து வைத்துள்ள, தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும்.

நன்றாக கொதித்ததும் அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான தேங்காய்ப் பாலைச் சேர்த்து கிளறி, ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும். 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து உப்பு, எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து கலக்கி விடவும். இதை சூடான இடியாப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Tags : யாழ்ப்பாணம் சொதி 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT