மகளிர்மணி

வாழைப்பூ  டோக்ளா 

24th Feb 2021 06:00 AM | - இல. வள்ளிமயில், திருநகர்.

ADVERTISEMENT

 

தேவையானவை:

வாழைப் பூ - 1
கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா 200 கிராம்
உடைத்த அரிசி ரவை - 100 கிராம்
பச்சை மிளகாய் - 6
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மோர் - அரை கிண்ணம்

செய்முறை:

ADVERTISEMENT

கடலைப்பருப்பு , பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியே மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளலாம். முதல் நாள் இரவே அரிசி ரவை, உடைத்த கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு இவற்றுடன் மோர், சமையல் சோடா, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு இட்லி மாவுப் பதத்துக்கு கரைத்து வைக்கவும். காலையில் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுப் பொடியாக நறுக்கி சுத்தம் செய்த வாழைப் பூவைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கிய பின், மாவில் கொட்டவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து, அதையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை இட்லித் தட்டுகளில் ஊற்றி, 15 நிமிடம் வேக வைத்து இறக்கிய பின், கத்தியால் சதுரமாகவோ அல்லது நீளமாகவோ துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், கடுகு தாளித்து, டோக்ளா மீது கொட்டி தேங்காய்த் துருவல், கொத்துமல்லித் தழை கிள்ளிப் போட்டு, கலந்து விட்டு பரிமாறவும்.

Tags : food
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT