மகளிர்மணி

உருளைக்கிழங்கு பக்கோடா

11th Feb 2021 05:24 PM | - லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.

ADVERTISEMENT

உருளைக்கிழங்கு பக்கோடா

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 4
கடலை மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - அரை கிண்ணம்
டால்டா - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் உரித்தது - அரை கிண்ணம்
பச்சைமிளகாய் - 4
பெருங்காயப்பொடி -அரை தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 10 இலைகள்

செய்முறை:

உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும், ஒன்று சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் எடுத்துவிடவும். சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா தயார்.

ADVERTISEMENT

Tags : சமையல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT