மகளிர்மணி

வெப்சீரியலில் நித்யாமேனன்!

10th Feb 2021 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT

 

அமேசான் பிரைம் விடியோவில் வெளியான "பீரித்: இன் டு த ஷேடோ' என்ற திரைப்படம், தென்னிந்திய சினிமாவைப் பற்றியும், இங்குள்ள நடிகர்களின் நடிப்புத் திறமை பற்றியும் உலக அளவில் தெரிந்து கொள்ள பெரிதும் உதவியது குறித்து இதில் நடித்துள்ள நித்யாமேனன் மகிழ்ச்சியில் உள்ளார். தொடர்ந்து முதன்முறையாக தெலுங்கில் "குமாரி ஸ்ரீமதி' என்ற வெப் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த நித்யாமேனன், கடந்த ஆறுமாதமாக பொதுமுடக்கம் காரணமாக தனிமையில் தங்கிருந்த அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:

""என்னுடைய குடும்பத்தினர் பெங்களூரிலேயே வசித்து வந்தாலும், சுற்றிலும் பசுமையாகவும், பறவைகள் ஒலிகள் மட்டுமே கேட்கும் இயற்கையான சூழலில் வசிக்க வேண்டுமென்று நான் விரும்பியதால் தனிமையாக வீடு எடுத்து வசிக்கிறேன். இந்த தனிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அடுத்த விநாடி என்ன நடக்கும் என்பது தெரியாமல் எதிர்பார்ப்புடன் வசிப்பது சுவாரசியமாக இருக்கிறது. மனிதர்களில் இருவகையினர் உள்ளனர். சிலர் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களை நினைத்து வருந்துவதுண்டு. என்னைப் போல் உள்ளவர்கள் அதை அழகாகவும், மகிழ்ச்சியாகவும் எடுத்துக் கொள்வார்கள். இரண்டையுமே சரிசமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கு தேவை.

தனிமையில் இருப்பது போரடிப்பதாக நினைப்பதே இல்லை. சில சமயங்களில் வீட்டுக்கு வெளியே இயற்கையை ரசிப்பதுண்டு போக்குவரத்து சந்தடியில்லாத சூழ்நிலை எனக்குள் அமைதியைத் தருகிறது. பொது முடக்கத்தின் போது பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

இணையதளம் வழியே கதக் நடனம் பயிலத் தொடங்கினேன்.

பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், சில ஆண்டுகள் மணிப்பாலில் தங்கிவிட்டு மீண்டும் 2009- ஆம் ஆண்டு பெங்களூரு திரும்பியபோது, நாங்கள் வசித்து வந்த இந்திரா நகர்ப்பகுதி பெரும் மாறுதலடைந்திருப்பதை பார்த்த போது பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். இருபுறமும் இருந்த நடைமேடைகளும் அடர்த்தியாக இருந்த மரங்களும் மறைந்து பெரிய மேம்பாலமொன்று காட்சியளித்தது. பழைய பெங்களூரை இனி பார்க்க முடியாதோ என்ற ஏக்கம் மனதில் தோன்றியது.

நான் மலையாளப் பெண்ணாக இருந்தாலும், ஏற்கெனவே இந்தி உள்பட நான்கு தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளேன். தற்போது மலையாளத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்திலும், தமிழில் தனுஷூடன் ஒரு படத்திலும், தெலுங்கில் இருபடங்களிலும் கூடவே முதன்முறையாக வெப் சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறேன்.

இதுவரை என்னுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிடும்படியான படம் ஏதும் அமையவில்லை என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறது. நல்லதொரு பாத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நடிப்புடன் நிறுத்திக் கொள்ளாமல் என்னுடைய இசைத் திறமையை வெளிப்படுத்த "நின்னிலா நின்னிலா' என்ற தெலுங்கு படத்தில் பின்னணி பாடல் ஓன்றைப் பாடியுள்ளேன். இது தவிர ஆங்கிலத்திலும் லண்டனைச் சேர்ந்த சரோட், இசைக் கலைஞரும், இசையமைப்பாளருமான சௌமிக் தத்தா இசையமைப்பில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். இந்தப் பாடல் இந்த ஆண்டின் மத்தியில் வெளியாகும்'' என்கிறார் நித்யாமேனன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT