மகளிர்மணி

சின்னச் சின்ன அழகுக் குறிப்புகள்...

10th Feb 2021 06:00 AM | - பா.கவிதா

ADVERTISEMENT

 

ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.

*முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

*தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.

ADVERTISEMENT

*துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.

*பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

*பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பளப்பளப்பாகும்.

*பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.

*பாசிப் பருப்பை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாகக் காணப்படும்.

*கொத்துமல்லி மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்து விழுதாக்கி  முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

*ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு மறையும். சருமம் பளபளப்பாகும்.

*பூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச் சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT