மகளிர்மணி

உருளைக்கிழங்கு  கட்லெட்

1st Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 

தேவையானவை :

உருளைக்கிழங்கு - கால் கிலோ
மிளகாய்த் தூள்  - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
முட்டை - 2
பிரெட் துண்டுகள் - 3
பெரிய  வெங்காயம்  -1
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை : 

ADVERTISEMENT

குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின் தோலுரித்து மசித்து வைக்கவும்.

பிரெட் துண்டுகளின் ஓரங்களை எடுத்துவிட்டு வெள்ளைப் பகுதியை மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கி வைக்கவும். அடுப்பில்  வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு கரம் மசாலா சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். ஆறியதும் மசாலாவை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி பிரெட் தூளில் புரட்டி தட்டி வைத்துக் கொள்ளவும். மேலும் இந்த உருண்டையை முட்டை கலவையில் புரட்டி எடுக்கவும். அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், மிதமான சூட்டில் உருண்டைகளைப் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

Tags : magaliarmani Potato cutlets
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT