மகளிர்மணி

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

1st Dec 2021 12:00 AM | அமுதா அசோக் ராஜா

ADVERTISEMENT

 

தேவையானவை :

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
கேரட் - 100 கிராம்
சீஸ் - கால் கிண்ணம் 
கார்ன் - கால் கிண்ணம் 
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா -1 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார்  - அரை கிண்ணம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி  - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
ப்ரெட் தூள் - அரை கிண்ணம்

செய்முறை : 

ADVERTISEMENT

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்துமல்லி, மிளகாய்த் தூள், கரம் மசாலா, உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளைப் புரட்டி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் புரட்டவும். இந்த உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார். 

Tags : magaliarmani Potato Cheese Balls
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT