மகளிர்மணி

லோக்கல்  ஹீரோ!

1st Dec 2021 12:00 AM

ADVERTISEMENT


உலகின் புகழ்பெற்ற பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனமான "மெட்டல் இன்க்' , கரோனா பொதுமுடக்கக் காலத்தில் சேவை செய்த வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் என ஆறு பேரைத் தேர்வு செய்து, அவர்களது, உருவத்தில் பார்பி பொம்மைகளை வெளியிட்டு கௌரவித்திருந்தது.

அதில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள சார்ல்டன் எனும் சிறிய நகரத்தில் வளர்ந்த மருத்துவர் கிர்பி ஒயிட்டும் ஒருவராவார். கிர்பியின் அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியர். அப்பா ரெயில்வே துறை ஊழியர். பள்ளிப்பருவத்தில் கிர்பியின் வகுப்பில் பத்து மாணவர்கள் மட்டுமே உடன் படித்துள்ளனர்.

அதில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்து படித்த ஒரே மாணவி கிர்பிதான். எளிய பின்னணியில் இருந்த வந்த அவருக்குக் கிடைக்கும் இன்றைய அங்கீகாரங்கள் அவர் எதிர்பாராதவை.

விக்டோரியா மாகாணத்தின் பென்டிகோ எனும் சிறுநகரத்தில் பொது நல மருத்துவராகப் பணிபுரிந்த கிர்பியும், கரோனா காலகட்ட இக்கட்டான நிலையை எதிர் கொண்டார்.

ADVERTISEMENT

ஆயினும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழலில், பி.பி.இ. கிட்களுக்காகக் காத்திருக்காமல் பாதுகாப்பு உடைகளை அவரே வடிவமைத்துத் தைத்தார். மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தும் வகையில் பருத்தி வகை துணிகளைப் பயன்படுத்தி வண்ண மிகு நிறங்களில் பாதுகாப்பு ஆடையைத் தயாரித்தார்.

மாகாணம் முழுவதும் நிலவி வந்த பி.பி.இ. உடை பற்றாக்குறையினைப் போக்குவதற்கு, "கவுன் ஃபார் டாக்டர்ஸ்' என்ற பெயரில் கிரவுட் ஃ பண்டிங் மூலம் ரூ. 30 லட்சம் நிதி திரட்டி. பி.பி.இ. ஆடைகளைத் தயாரித்தார். பாதுகாப்பு உடைகளைத் தைத்து அவற்றை மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார். ஏழு ஆயிரம் வண்ணமிகு பாதுகாப்பு உடைகளை அனுப்பி, மருத்துவர்கள், மற்றும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
கடந்த 2020 - ஆம் ஆண்டு விக்டோரியா மாகாணத்தில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் "விக்டோரியா லோக்கல் ஹீரோ' விருதினை பெற்றார் மருத்துவர் கிர்பி ஒயிட்.

Tags : magaliarmani Local hero
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT