மகளிர்மணி

குழம்பு டிப்ஸ்...

ஆர். ராமலட்சுமி


மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது பச்சை மிளகாயை சிறிது எண்ணெய்யில் வதக்கிவிட்டு அரைத்தால் மோர்க்குழம்பு வெண்மையாக இருக்கும்.அரைக்கவும் எளிது.

பாகற்காய் குழம்பு வைக்கும் போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்து போட்டு வைத்தால் பாகற்காய் குழம்பில் கசப்பே தெரியாது.

எந்த சாம்பார் செய்தாலும் நான்கு பச்சை வெங்காயத்தைக் கடைசியில் நைசாக அரைத்து சேர்த்துவிட்டு இறக்கினால் சாம்பார் பிரமாதமாக மணக்கும்.

குழம்பு செய்து கீழே இறக்கும்போது தனியா, கடலைப்பருப்பு, நிலக்கடலை, கொப்பரை, சிறிதளவு வெந்தயம், சிறிதளவு மிளகு இவைகளை அரைத்துப் பொடி செய்து குழம்பில் இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு கொதி வந்து இறக்கினால் குழம்பு சூப்பராக இருக்கும்.

வெந்தயக் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெய்யில் தாளித்து அதிலேயே மிளகாய் பொடி காய்கறி இவைகளையும் வதக்கி பிறகு புளி, உப்பு சேர்த்து குழம்பு செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும்.

வெந்தயத்தை சிவக்க வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சாம்பார் செய்யும்போது கொதிக்கும் சாம்பாரில் அரை தேக்கரண்டி போட்டால் சாம்பார் கமகம என இருக்கும்.

ஆரஞ்சுப் பழத் தோலையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி சிறி
தளவு எண்ணெய் ஊற்றி வதக்கி வற்றல் குழம்பு செய்தால் கமகமக்கும் மணம்.

சாம்பார் வாசனையுடன் இருக்க கொதித்து இறக்கியவுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.

வெந்தயக் குழம்பு, பாகற்காய் பிட்லை மணமாகவும் சுவையாகவும் இருக்க மூன்று உளுந்து அப்பளங்களை பொரித்து நொறுக்கிப் போட்டு இறக்கி விட வேண்டும்.

வற்றல் குழம்பு கொதித்த பின்னர் நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

பருப்பு உருண்டைக் குழம்பில் பருப்பு உருண்டைகள் குழம்பில் கரையாமல் இருக்க பருப்பை அரைக்கும்போது ஒரு பிடி பச்சரிசியையும் சேர்த்து அரைத்து உருட்டிப் போட்டால் கரையாது.

காரக் குழம்பு செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலைப் பருப்பை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு குழம்பு செய்தால் மணமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT