மகளிர்மணி

 ரோல் சப்பாத்தி 

20th Aug 2021 05:05 PM | - கே.அஞ்சம்மாள், ராம்நாடு. 

ADVERTISEMENT


தேவையானவை: 

கோதுமை மாவு - கால் கிலோ
கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் - தலா ஒரு கிண்ணம்
இஞ்சி விழுது - அரைதேக்கரண்டி
புதினா - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சிவிழுது, நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும். 

ADVERTISEMENT

குறிப்பு: குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு இப்படிச் செய்து கொடுத்தால், கையில் வைத்தபடியே சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT