மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

11th Aug 2021 06:00 AM | -ஸ்ரீ

ADVERTISEMENT

 

தொடரில் இருந்து விலகும் நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "செந்தூரபூவே', தொடரில் வில்லியாக நடித்து வரும் தர்ஷா குப்தா. திடீரென இத்தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இத் தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த இவர், பெரியதிரையில் "ருத்ர தாண்டவம்' மற்றும் சன்னி லியோனுடன் ஒரு படமும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு அங்கீகாரத்தை கொடுத்த "செந்தூர்பூவே' தொடரில் இருந்து விலகுகிறார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தர்ஷா தன் இன்ஸ்டாபக்கத்தில் , "எதிரிகள் இல்லையென்றால் நீ இன்னும் இலக்கை நோக்கி பயணிக்கவில்லை' என்று அர்த்தம் என்று பதிவிட்டுள்ளார். இதனால், அவர் தொடரில் இருந்து விலகியதுக்கு காரணம் பெரியதிரையில் பிசியாக உள்ளதா அல்லது வேறு எதுவும் காரணமா என இவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எந்நேரமும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தாவை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள்.


முதலிடம் பிடித்த ரோஜா!

ADVERTISEMENT

ஒட்டுமொத்த சின்னத்திரை தொடர்களிலேயே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது "ரோஜா' தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், சிபு சூர்யன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், மூத்த கலைஞர்களான வடிவுக்கரசி, நடிகர் ராஜேஷ் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்தொடர், சமீபத்தில், 900 எபிசோடுகளை கடந்துள்ள நிலையிலும், ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இத்தொடரின் குழுவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இத்தொடரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT