மகளிர்மணி

ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றவர்களுக்கு சிமெண்ட் பரிசு!

11th Aug 2021 06:00 AM | - கண்ணம்மா பாரதி 

ADVERTISEMENT


டோக்கியோ ஒலிம்பிக்ஸில்  இந்திய  வீரர்கள் பதக்கம் ஏதும் பெறாத நிலையில் பெண்கள் இந்தியாவின்  மானத்தைக் காத்திருக்கிறார்கள்.

பளு தூங்குவதில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மீரா பாய் சானு,  இறகுப்   பந்தாட்டத்தில்  வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றிய  பி.வி. சிந்து, குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கத்துடன் திரும்பிய  லவ்லினா போர்கோஹேன் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மகளிர்கள்.   

இந்த மூன்று வீராங்கனைகளுக்கு  மத்திய, மாநில அரசுகள்  வழங்க இருக்கும் பரிசுத் தொகைகளைத் தாண்டி, பல தனியார் நிறுவனங்களும் அன்பளிப்பு வழங்க முன்வந்துள்ளன.    

மீரா பாய்க்கு டோமினோஸ்  பீட்சா நிறுவனம் ஆயுளுக்கும் பீட்சா வழங்க முன்வந்துள்ளது. 

ADVERTISEMENT

ஆனால்  ஒலிம்பிக்ஸ்ஸில்  பதக்கம் பெற்ற அனைவருக்கும்  அவர்களது கனவு இல்லத்தைக்  கட்ட  தேவையான சிமெண்ட்  இலவசமாகத் தர முன்வந்துள்ளது "ஸ்ரீ  சிமெண்ட்' நிறுவனம். 

இந்திய  விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ்ஸில்  தங்களின் திறமைகளை காட்சிப்படுத்தியுள்ளார்கள். அவர்களது கடின உழைப்பு ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ்ஸில் பதக்கம் பெற்று  இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தி இருக்கும்   அவர்களுக்கு  ஏதாவது செய்ய வேண்டும்  என்று முடிவு செய்தோம். சொந்தமாக வீடு அமைய வேண்டும்  என்று நினைப்பது அனைவரின் லட்சியமாகும். ஒலிம்பிக்ஸ் பதக்கம் பெற்ற  எல்லா வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது எண்ணம் போல வீடு கட்டத்   தேவைப்படும்  சிமெண்ட்  வழங்கலாம் என்று முடிவு செய்தோம்..' என்று ஸ்ரீ  சிமெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT