மகளிர்மணி

சுண்டைக்காய்  துவையல் 

11th Aug 2021 06:00 AM | - இல.வள்ளிமயில், திருநகர். 

ADVERTISEMENT

 

தேவையானவை:

பிஞ்சான சுண்டைக்காய் - 1கிண்ணம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
வர மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - அரை தேக்கரண்டி

செய்முறை:

ADVERTISEMENT

வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வரமிளகாய், உளுந்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து மிக்ஸியில் கொர கொரப்பாகப் பொடிக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெய்யை ஊற்றி, சுண்டைக்காயை முழுமையாக அப்படியே வதக்கவும். நன்றாக வதங்கியதும் அடுப்பைப் ஆஃப் செய்து விடவும். பொடித்த பொடியுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, மீண்டும் ஒரு சுற்று சுற்றிய பிறகு வதக்கிய சுண்டைக்காயைச் சேர்த்து, உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றிக் கெட்டியாக அரைக்கவும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்திற்கு ஏற்ற சுண்டைக்காய் துவையல் தயார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT