மகளிர்மணி

முகத்தைப் பொலிவாக்கும் கொய்யா ஃபேஸ் பேக்!

4th Aug 2021 06:00 AM | - கவிதாபாலாஜி

ADVERTISEMENT


கொய்யாவில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. இது சருமத்தை ஒளிரச் செய்யும் தன்மைக் கொண்டது. எனவே, கொய்யாப் பழத்தை கொண்டு பேஸ் பேக் செய்து கொண்டால் முகம் பளிச்சிடும்.

ஃபேஸ்பேக் தயாரிக்கும் முறை:

தேவையானவை:

தேன் -1 தேக்கரண்டி
கொய்யாப் பழத்தின் - தோல்
செய்முறை: முதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக் கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும்.

ADVERTISEMENT

கொய்யாவிலுள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, தோலுக்கு மிருதுவான, ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கும். வாரம் இருமுறை இந்த ஃபேஸ்பேக் செய்து பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT