மகளிர்மணி

மூங்கில் அரிசி வெஜ் சூப் 

4th Aug 2021 06:00 AM | - அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

ADVERTISEMENT

 

தேவையானவை: 

மூங்கில் அரிசி - ஒரு கிண்ணம்
கேரட் - ஒன்று (நறுக்கவும்)
வேக வைத்த பட்டாணி - ஒரு கிண்ணம்
பீன்ஸ் - 5 (நறுக்கவும்)
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 2 பல்
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி 
கொத்துமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

ADVERTISEMENT

மூங்கில் அரிசியில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும். வாணலியில் வெண்ணெய்யைக் காயவைத்து.. பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்க வேண்டும். உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியைச் சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் அரிசியை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்து மல்லித் தழை தூவி, இறக்கி பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT