மகளிர்மணி

பிணி அகற்றும் சித்த மருத்துவம்!

ஆர்.கே. லிங்கேசன்


குடற்புண்ணால்  அவதிப்படுபவர்கள்  தினமும்  சிறிதளவு  அகத்திக்கீரையை  சமைத்து  சாப்பிட்டு வர படிப்படியாக  குடற்புண்  குணமாகும்.

பப்பாளிப் பழத்தை  அடிக்கடி  உண்பதை  பழக்கப்படுத்திக் கொண்டால்  மூல நோய் படிப்படியாக  குறைந்து  குணமாகும்.

குடிக்கும்  தண்ணீர் உள்ள  பாத்திரத்தில்  நொச்சிப் பூவை போட்டு ஊறவைத்து பின் அந்த தண்ணீரை  பருகி வர ரத்தவாந்தி நிற்கும்.

அத்திப்பழத்தை சுத்தம் செய்து  ஒரு நாளைக்கு  இரண்டு பழம்  என்ற அளவில்  சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

முலாம் பழத்தை  அடிக்கடி  சாப்பிட்டு  வந்தால்  சிறு நீரகம்,  தொடர்பான  கோளாறுகள்  விரைவில்  குணமாகும்.

புதினா  இலைகளை  இடித்துச் சாறெடுத்து,  அத்துடன்  பச்சைத் கற்பூரம்  சிறிதளவு  சேர்த்துக் குழைத்து மூட்டுவலி  உள்ள  இடங்களில்  அழுத்தித் தேய்த்து  வந்தால்  மூட்டு  வலி குணமாகும்.

அகத்திக் கீரையை ஒரு நாள்விட்டு   ஒரு நாள்  சமைத்துச் சாப்பிட்டு வர ரத்தக் கொதிப்பு  படிப்படியாக  குணமாகும்.

வெந்தயக் கீரையை  சமைத்து  உணவுடன் சேர்த்து  சாப்பிட்டு  வந்தால்  இருமல்  குணமாகும்.

( "எளிய செலவில் சித்த மருத்துவம்' நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT