மகளிர்மணி

2 மணி நேரத்தில் 36 புத்தகங்கள்!

ரிஷி

வளர்ந்து வரும் சமூக ஊடகங்களின் தாக்கத்தால், இளம் வயதினரிடையே வாசிப்புப் பழக்கம் மறைந்து போன நிலையில், இந்திய-அமெரிக்க சிறுமியான 5 வயது கியாரா கவுர், இரண்டு மணி நேரத்திற்குள் 36 புத்தகங்களை வாசித்து உலக சாதனை படைத்துள்ளார்.

சமீபத்திய நிகழ்வுகளில், கியாரா கவுரின் வாசிப்பு மீதான ஆர்வம் பேசுபொருளாக மாறியுள்ளது. 36 புத்தகங்களை 2 மணி நேரம் இடைவிடாது வாசித்ததற்காக சமீபத்தில் லண்டனின் உலக புத்தகத்திலும், ஆசிய புத்தகத்தின் சாதனைகளில் இடம்பெற்றுள்ளார் இவர். பிப்ரவரி 13, 2021 அன்று இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனைக்காக உலக சாதனை புத்தகம் சிறுமி கியாராவை "குழந்தை பிராடிஜி' என்று வர்ணித்துள்ளது.

கியாரா, தற்போது அபுதாபியில் வசித்து வருகிறார். இவர், பள்ளி நூலகத்தில், ஓய்வறையில், காரில் என எங்கிருந்தாலும் படித்து கொண்டே இருந்திருக்கிறார். இதை கவனித்த கியாராவின் ஆசிரியர்களில் ஒருவர் அவரை பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கியாரா புத்தகங்கள் வாசிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. வண்ணமயமான படங்கள் மற்றும் பெரிய நூல்களைக் கொண்டிருப்பதை கியாரா படிக்க விரும்புகிறாள். அவளுக்கு பிடித்த சில வாசிப்புகளில் "சிண்ட்ரெல்லா', "ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்', "லிட்டில் ரெட் ரைடிங் ஹூட்' ஆகியவை அடங்கும்' எனக் கூறியிருக்கிறார்.

கியாராவின் தாத்தா தான் அவரிடம் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அவரின் தாத்தா வாட்ஸ்அப் காலில் பேசும்போது மணிக்கணக்கில் அவர் கதை கேட்பாராம். ஆகவே, கியாராவின் வளர்ப்பிலும், புத்தகங்கள் மீதான அவரது அன்பிலும் தாத்தா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT