மகளிர்மணி

மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் 

தினமணி

தேவையானவை: 

துவரம் பருப்பு - 1 கப்
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு 
சின்ன வெங்காயம் - 3-4 
தக்காளி - 1 (நறுக்கியது)
 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
பூசணிக்காய் - 4-5 துண்டுகள் 
கொத்துமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... 
எண்ணெய் - 1 தேக்கரண்டி
 கடுகு - 1/2  தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் புளியை 1 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து,  கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பைச் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர், நறுக்கி வைத்திருக்கும் பூசணிக்காயை சேர்த்து லேசாக வதக்கி விட்டு, மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, 

மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிளறி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் புளியை ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 

பூசணிக்காய் சாம்பார் ரெடி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT