மகளிர்மணி

தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷல் சமையல்!:  பருப்பு பாயசம் 

DIN


தேவையானவை: 

பாசிப்பருப்பு - 100 கிராம்
மண்டை வெல்லம்  - 200 கிராம்
தேங்காய் மூடி - மீடியம் சைஸ்
கிஸ்மிஸ்  - 10
முந்திரிப் பருப்பு - 10 
ஏலக்காய் - 3 
நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும்.  பின்னர், மண்டை வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். பின் வறுத்த பாசிப்பருப்பினை குக்கரில் போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் தணலை சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். பின் குக்கரைத் திறந்து பருப்பை நன்கு மத்தால் கடைந்து விடவும். தூளாக்கி வைத்துள்ள வெல்லத்தை மூன்று மடங்கு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின்னர், பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பினைப் போட்டு அத்துடன் வடிகட்டிய வெல்லக் கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும்.

அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். வாணலியில் நெய்யினை ஊற்றி முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை வறுத்து சேர்க்கவும். ஏலக்காயை பாயசத்தில் சேர்க்கவும். எல்லா பொருட்களையும் ஒரு சேரக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். 

சுவையான பருப்பு பாயசம் தயார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT