மகளிர்மணி

முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்!

அமுதா அசோக் ராஜா

முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன.

முள்ளங்கி கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது. 

முள்ளங்கி ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.

மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துகள் சரி செய்து கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள செல்கள் நன்கு செயல்பட ஊக்குவிக்கின்றன.

முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலச்சிக்கலை சரி செய்கிறது. 

செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருள்களை முள்ளங்கி நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு  ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.

முள்ளங்கி சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. முள்ளங்கிச் சாற்றினை  தொடர்ந்து அருந்தி வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலானது குணமாகிறது.  சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் உள்ள நச்சினை வெளியேற்றி. சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும். 

முள்ளங்கி கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.  உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய் காய் இது.  

முள்ளங்கியை தொடர்ந்து எடுத்துக் கொண்டால்  புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT