மகளிர்மணி

பெண்கள் மட்டுமே அறிந்த பாஷை! 

சாரதா விஸ்வநாதன்

சீனாவிலுள்ள ஹுனான் மாகாணத்திலுள்ள ஹியூயான் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் "யாங் ஹநினாய்' என்ற மிகவும் வயதான பெண்மணி. இவரின் வயதையொத்த வயதினர் எவருமே தற்போது உயிரோடு இல்லை.

இவர், அறிந்த பாஷை தான் இந்த நுஷு (பட்ங் ள்ங்ஸ்ரீழ்ங்ற் ஜ்ர்ழ்ப்க் ர்ச் ய்ன்ள்ட்ன்) இதில் வேடிக்கை என்ன வென்றால் இவருக்கு சீனத்து பாஷை எதுவுமே எழுதவோ படிக்கவோ தெரியாது. இவருக்கு எழுத படிக்கத் தெரிந்ததெல்லாம் இந்த நுஷு மட்டும் தான். இது வழி வழியாக வந்த செல்வம்.

2000 வருடங்களுக்கு முன் சீனப் பெண்மணிகள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வீடு, வயல் வெளிகளில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இவர்கள், தங்களின் துக்கங்களை மன உணர்வுகளை மற்ற சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த நுஷு பாஷையை உருவாக்கினார்கள்.

அக்காலத்தில், பெண்கள் சிறு வயதில் பிறந்த வீட்டின் அடிமை. திருமணத்திற்குப் பின் புகுந்த வீட்டு அடிமை. இவர்களுக்கு என்று எந்த ஒரு சிறு உரிமையும் கிடையாது. பாதங்கள் கட்டப்பட்டு (பெண்களின் பாதங்கள் சின்னதாகத்தான் இருக்க வேண்டுமாம்) தங்களின் எதிர்காலம் என்ன என்பதைக் கூட நினைக்க உரிமையற்றவர்களாக இருந்தனர்.

தங்களின் துக்கங்களையும் சொற்ப மகிழ்ச்சிகளையும் நுஷு பாஷையிலேயே கடிதங்களாக.. பாட்டுகளாக.. கவிதைகளாக எழுதி ஒருவரோடு ஒருவர் மிகவும் ரகசியமாக பரிமாறிக் கொள்வார்கள். இவை அனைத்தும் உண்மை நிகழ்ச்சிகளைப் பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

யாங் இந்த பாஷையை தன் அத்தையிடமிருந்துதான் கற்றுக்கொண்டார். இது சற்று கடினமான பாஷைதான். இதனை முழுமையாக எழுதிப்பழக அவருக்கு ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டதாம்.

வீட்டு வேலைகள்... வயல் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு, வீட்டு பின்புறத்தில் அமர்ந்து, மற்ற தோழிகளுக்கு நுஷுவில் எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களை படித்துக் காட்டுவாராம் யாங். தங்களின் உறவினர்கள், தோழிகளைப்பற்றி படிக்கும் போது மற்ற தோழிகள் கண்ணீர் விடுவார்களாம்.

திருமணம் முடிந்த மூன்றாம் நாள்தான் மணமகளின் தோழிகள் அவளை சந்திக்க வரவேண்டும் என்பது அப்போதைய சட்டம். யாங்க்கு திருமணம் முடிந்த பிறகு அவளின் சிநேகிதிகளின் பட்டாளம் அவளின் வீட்டிற்கு வந்து மிகவும் அழகிய எம்பிராய்டரி வேலை செய்யப்பட்ட உறையிடப்பட்ட புத்தகங்களை தங்களின் பரிசாக அவளுக்குக் கொடுத்தனர். இதனை "ஸாங்ஹோஷதி' என்று குறிப்பிடுகின்றனர்.

முழுக்க முழுக்க நுஷு பாஷையில் எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் தாம் இன்று வரை முற்றிலும் அழிந்துவிடாமல் இருக்கிறதாம்.

பொதுவாக, ஸாங்ஹோஷதியில் பல அரிய கவிதைகளும், அரிய குறிப்புகளும் எழுதப்பட்டிருக்கும்.

உதாரணமாக, "என் மிக அருமையான இனிய தோழியே! இந்த நாள் வரை நாம் அனைவரும் எத்தனை மகிழ்ச்சியாக ஒட்டி உறவாடி நாள்களை கழித்தோம். நாளை நீ உன் புருஷன் வீட்டிற்கு போய் விடுவாய் இந்தப் பிரிவை எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லையே. உன் புருஷன் வீட்டில் உன் வாழ்க்கை, உன் எதிர்காலம் எப்படி இருக்குமோ, என்பதை நினைக்கவே மனம் கலங்குகிறது. என் இனிய தோழியே உனக்காக... உன் வாழ்வின் மகிழ்ச்சிக்காக நாங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்திப்போம்". இப்படித்தான் உணர்ச்சிக்குவியலாக மனதை பிழிந்து தங்கள் எண்ணங்களை வடித்திருப் பார்கள்.

ஒவ்வொரு தோழியும் தங்கள் கவிதைகளையும் மணப்பெண்களுக்கு தங்கள் பரிசாக அளிப்பார்கள். இந்த அரிய பொக்கிஷத்தை அவள் மிக மிக பத்திரமாக வைத்திருப்பாள். கடைசியில் அவள் இவ்வுலகை விட்டு போகும் போது இந்த ஸாங்ஹோஷதிகளும் அவளுடனேயே புதைக்கப்பட்டுவிடுமாம்.

ஜப்பானிய படையெடுப்பின்போது யாங் வசம் இருந்த நுஷுவைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் பெரும்பாலும் தொலைந்து போய் விட்டனவாம். மீதமிருந்தவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து கட்டி வைத்து விட்டாராம்... இடையே நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. நுஷு எழுத்துகள் கூட கிட்டத்தட்ட மறந்து போய்விட்ட நிலை...

ùஸா (ழட்ர்ன்) என்ற ஓய்வு பெற்ற அதிகாரி, 1930 -ஆம் வருட வாக்கில் தன் வீட்டில் பழைய சாமான்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை குடைந்த போது... ஐந்து தலைமுறைக்கு முந்தைய இவரின் கொள்ளுப்பாட்டியின் புத்தகம் ஒன்று இவர் கையில் கிடைத்ததாம். அப்புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது... என்ன பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் இவருக்கு புரியவில்லை. ஆயினும் இந்த அரிய பொக்கிஷம் தன் கொள்ளுப்பாட்டியின் சொத்து என்பது மட்டுமே இவருக்குப் புரிந்தது.

அந்தப் புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள, மிகத் தீவிரமாக பற்பல நண்பர்களிடம் விசாரித்ததில், இது நுஷு என்ற பாஷையில் எழுதப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த பாஷை எங்கு புழக்கத்தில் இருந்தது. இதைப்படிக்கத் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா... எங்கு இருக்கிறார்கள்? என்பதைப் பற்றி கண்டுபிடிக்க அலையாய் அலைந்தார்.

ùஸா வின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 1954- ஆம் ஆண்டு ஜியங்யாங் என்ற ஊரில் இருந்த கலை பண்பாட்டு மையத்தில் வேலை கிடைத்தபோது, அங்கே நூஷுவை பற்றி அறிந்தவர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஒரு நிமிடம் கூட வீணாக்காமல், மிகவும் சுறுசுறுப்பாக அவ்வூரைச் சுற்றிலும் உள்ள இடங்களுக்கு எல்லாம் சென்று தேடித்தேடி இந்த பாஷை தெரிந்த ஒவ்வொரு பெண்மணியாக சந்தித்து அவர்கள் மூலம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் நுஷு வார்த்தைகளைச் சேகரித்தார். பின்னாளில் இவற்றையெல்லாம் கோர்வையாக்கி புத்தகமாக வெளியிட்டு இந்த பாஷைக்கு உயிரூட்ட எண்ணி இருந்தார்.

ஆயினும் அவரின் அதிர்ஷ்டத்தை என்ன வென்பது? 1957-ஆம் ஆண்டு ஏற்பட்ட வலதுசாரி எழுச்சியின் போது அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிவிட்டு, இவரை வயல்வெளிகளில் வேலை செய்ய அனுப்பிவிட்டது அந்த புதிய அரசாங்கம்.

அதன் பின்னர் 1973 -இல் மறுபடியும் ஜியங்யாங் கலை பண்பாட்டு மையத்தில் வேலைக்கு அமர்ந்த போது, மிகவும் பிரயாசையுடன் நுஷுவைப் பற்றிய விவரங்களை சேகரித்தார்.

அப்போதுதான் யாங்கை சந்தித்தார்.

ùஸாவிடம் இருந்த அந்தப் புத்தகத்தில், பெண்கள் ஒரு குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்குச் சென்றதும் அங்கே எப்படி அந்த சூழலுக்கு ஏற்றவாறு தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு தன்னை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் மிகவும் சுவாரசியமாக புனையப்பட்ட கவிதையாம் அது.

மேலும், ஜியங்யாங் ஊரில் வாழ்ந்து வந்த "யூ சிங்' என்ற பெண்ணைப் பற்றி இருந்தது. அழகிலும் அறிவிலும் அவருக்கு இணை அவர்தாம். இவர் மிகவும் பணக்கார குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய சகோதரருக்கு பாடம் சொல்லி கொடுப்பதற்காக ஒரு டியூஷன் மாஸ்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.

தன் சகோதரனுக்கு பாடம் நடத்தும் போது யூ சிங்கும் தன் சகோதரரின் அருகில் அமர்ந்து உன்னிப்பாக கவனிப்பாராம். அதன் விளைவு பதினைந்தாம் வயதிலேயே தன் சகோதரனை விட பன் மடங்கு புத்திசாலியாகி விட்டாராம் யூசிங்.

13-ஆம் நூற்றாண்டில் கோலோச்சிய சாங் மன்னர் இவருடைய சகோதரரைப் பார்க்க விரும்பினாராம். அரசரின் அழைப்பை ஏற்று அவரை சந்திக்க சென்றவரிடம், அரசன் இவருடைய குடும்பத்தினரைப் பற்றியெல்லாம் விவரம் கேட்க தன்னையும் விட தன் இளைய சகோதரி அறிவு ஆற்றலில் மிகவும் சிறந்தவர் என்று மிகவும் பெருமிதத்துடன் கூற, உடனே அரசர் உங்கள் சகோதரி யூ சிங்கை அழைத்து வாருங்கள் என்றாராம். யூ சிங்கை சந்தித்த அரசருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன்னுடனே வைத்துக் கொள்ள திட்டமிட்டார்.

அரசர் எப்படியும் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த யூ சிங்க்கு கடைசியில் ஏமாற்றம் தான். வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மன்னர் யூ சிங்கை திருமணம் செய்து கொள்ளாமலேயே தன்னுடன் வைத்துக் கொண்டுவிட்டாராம். ""மனைவி என்ற அங்கீகாரம் இல்லாமலேயே நான் மன்னனின் அரவணைப்பில் வாழத் துவங்கினேன். எனக்கென்று தனி அரண்மனையில் எல்லாவிதமான அரச போகத்திலும் வாழ்நாள்கள் கழிந்தன. வாரத்தில் மூன்று நாள்கள் மன்னர் முற்றிலுமாக என்னுடன்தான் தங்கியிருப்பார். ஆயினும் எனக் கென்று நான் கொஞ்சி மகிழ்விக்க, பாலூட்டி சீராட்ட ஒரு குழந்தை எனக்கில்லை. அரசர் இங்கிருந்து போய் விட்டால் இந்த அரண்மனையில் ஒரே நிசப்தம்தான் கோலோச்சும். இந்த நிசப்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நீர் நிறைந்த கண்களுடன் தான் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்'' என்று யூசிங் தன் பெற்றோருக்கு நுஷுவில் எழுதிய கடிதம் அது. பிற்காலத்தில் பெண்களிடையே தலைசிறந்த பாடலாக இது மாறியது.

அரசர் வாரிசில்லாமலேயே மரணம் அடைந்து விட, நாட்டில் ஒரே குழப்பம். வாரிசு இல்லாததால் யூசிங்கை கவனிக்க யாருமே இன்றி.. மனமொடிந்து போய் இறுதிநாள்களை கண்ணீருடன் கழித்து வந்தாராம்.

யாங் ஹநினாய் இதனை ùஸாவுக்கு படித்து காட்டியதோடு, அவருடன் சேர்ந்து பாட்டாக பாடும் போது இருவருமே கண்ணீரில் நனைந்து போவார்கள்.

இதைப் போல் இன்னும் எத்தனை எத்தனையோ நுஷுவில் எழுதப்பட்ட கதைகள்... கட்டுரைகள்... கவிதைகள் என்ற அனைத்து பொக்கிஷங்களையும் தேடிதேடிப் பிடித்து அவை அனைத்திற்கும் உயிரூட்டி வருகிறார் அதிகாரி ùஸா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT