மகளிர்மணி

சின்னத்திரை  மின்னல்கள்!

7th Apr 2021 06:00 AM | -ஸ்ரீ

ADVERTISEMENT

 

மீண்டும் அண்ணியார்!

சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பாகி முடிவுற்ற தொடர்களில் "தெய்வமகள்' தொடரும் ஒன்று. இத்தொடரில் அண்ணி காயத்ரியாக நடித்து புகழ் பெற்றவர் ரேகா கிருஷ்ணப்பா. இந்தத் தொடரின் மூலம் சின்னத்திரை வட்டாரத்தில் இவரை, அண்ணியார் என்றே அழைக்கத் தொடங்கினர்.

கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த இவர், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். விரைவில் புதியதாக ஒளிப்பரப்பாகவுள்ள "தமிழும் சரஸ்வதியும்' என்ற தொடரில் கமிட் ஆகியிருக்கிறார். இத்தொடரை "தென்றல்', "தெய்வமகள்', "நாயகி' ஆகிய தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார். இதில் தீபக் நாயகனாகவும், நட்சத்திரா நாயகியாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து சின்னத்திரை வட்டாரத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ரேகா, "விரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

 

கரகாட்டப் பயிற்சி பெறும் நடிகை!

பெரியதிரை நாயகிகள் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது இணையத்தில் அதிகளவு ரசிகர்கள் பெருகி வருகின்றனர். அதற்காகவே இன்ஸ்டாகிராமில் பலரும் தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜய் டிவியின் "பாக்கியலட்சுமி' தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ். இத்தொடரின் மூலம், திவ்யா எங்கு வெளியில் சென்றாலும் அவரை "ஜெனி.. ஜெனி..' என்றே அழைக்கிறார்களாம்.

மேலும், இவரது ரசிகர்கள் பலரும் "ஜெனி போன்ற ஒரு பெண்ணைதான் திருமணம் செய்ய ஆசை' என பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், திவ்யா கரகாட்டப் பயிற்சி பெற்று வருவது போன்ற விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு அவரது ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.

Tags : சின்னத்திரை  மின்னல்கள்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT