மகளிர்மணி

கொள்ளு வடை 

ராதிகா அழகப்பன்

தேவையானவை:

கொள்ளு பருப்பு - கால்கிலோ
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொள்ளு பருப்பை ஆறு மணி நேரம் ஊற வைத்து எடுத்து, கிரைண்டரிலிட்டு கரகரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு இவைகளை இட்டு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் மாவு கலவையை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப் பிடித்து, வடைகளாகத் தட்டி நன்கு காய்ந்த எண்ணெய்யிலிட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். கொள்ளுவடை தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT