மகளிர்மணி

கதம்பம்!

7th Apr 2021 06:00 AM | - காந்தி, செய்யாறு.

ADVERTISEMENT


திருநங்கைகள் இயக்கும் மெட்ரோ ரயில் நிலையம்!

அண்மையில் சென்னை புது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ரயில் நிலையத்தில் 10 திருநங்கைகளையும், 4 திருநம்பிகளையும் பணியமர்த்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமைப்படுத்தியுள்ளது. இவர்கள் டிக்கெட் விநியோகம், பயணிகளின் வெப்பநிலை அறிதல், டிக்கெட் பரிசோதனை, பொதுத் தளம், உதவி மையம், வாகன நிறுத்து தளம் என பணியாற்றி வருகின்றனர்.

திருநங்கைகளின் அமைப்பு மூலமாக, பட்டப்படிப்பை முடித்தவர்களின் பட்டியலில் இருந்து முதல் 14 நபர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் உதவியுடன், 20 நாட்கள் பயிற்சி (ள்ந்ண்ப்ப்
ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்) முதலில் வழங்கப்பட்டது. ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களும் இதில் கைகோர்த்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கினர். முக்கியமாக ஸ்போக்கன் இங்கிலீஷ், கணிப்பொறி அறிவு, பொதுமக்களிடம் பழகும் முறை போன்ற விஷயங்களுக்கான பயிற்சிகளை வழங்கியதுடன், பெரிஃபெரி (டங்ழ்ண்ச்ங்ழ்ழ்ண்) அமைப்பின் மூலம் சான்றிதழும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மெட்ரோ ஸ்டேஷன் பணிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. சென்னை மெட்ரோவுக்கு மேன்பவர் வழங்கும் கேசிசி நிறுவனம் மூலம் இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இரு பெண் தலைவர்கள்!

வடக்கு ஐரோப்பாவில் இருக்கும் எஸ்டோனியா என்கிற நாட்டில் முதன்முறையாகப் பெண் ஜனாதிபதியும், பெண் பிரதமரும் அந்நாட்டை ஆளத் தேர்வாகியுள்ளனர். காஜா கல்லாஸ் எஸ்டோனியாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்வாகி வரலாறு படைத்தார். மேலும், அந்நாட்டின் இளம் ஜனாதிபதியாக கெர்ஸ்டி கல்ஜுலைட் தேர்வாகிக் கூடுதல் பெருமை சேர்த்துள்ளார். இரு பெண்கள் ஆட்சி செய்யும் இந்நாட்டில், பல இளம் பெண்கள் இனி தைரியமாக தங்கள் கனவை நோக்கி பயணிப்பார்கள் என நம்பப்படுகிறது.

Tags : கதம்ம்ம்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT