மகளிர்மணி

உடல் அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் தயிர்!

7th Apr 2021 12:00 AM | - நெ.இராமன், சென்னை.

ADVERTISEMENT


இந்தியச் சமையலில் தயிர் பலவிதமாகப் பயன்படுகிறது. சோறு, பழம் எவற்றுடனும் தயிர் இன்றியமையாத ஒன்றாகும்.

தயிரிலுள்ள பாக்டீரியா சருமத்தை மிருதுவாக்கும். மேலும் குடல் அழற்சி, வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நோய்களுக்குக் காரணமான கிருமிகளை பாக்டீரியா அழிக்கிறது.

இரைப்பையில் எரிச்சல் ஏற்பட்டு வயிற்றுக்குள் எந்த உணவும் தங்க முடியாமல் போகும். அந்நிலையில் தயிரிலுள்ள லாக்டிக் அமிலம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். வாயுவின் உயர்வையும் குறைக்கும்.

அதிக அளவில் அம்மோனியா விடுவிக்கும்போது ஈரல் கெட்டுப் போய் கோமாவில் கொண்டு போய் விட்டுவிடும். இதற்கு, அன்றாட உணவில் தயிரைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால் அத்தகைய அபாயம் ஏற்படாது.

ADVERTISEMENT

அழகு சாதனத்தில், உள் மருந்தாக மட்டுமல்ல, வெளி மருந்தாகவும் தயிர் பயன்படுகிறது. தயிரை உபயோகித்து தலைமுடியை சீர் செய்யலாம். முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். பொடுகு நீங்கும். கடலை மாவுடன் தயிரைக் குழைத்துப் பூசி வர பருக்கள் மறையும். தயிர் கலந்த நீரால் முகம் கழுவி வர முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள் மறையும்.

Tags : தயிர்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT