மகளிர்மணி

தங்கமே.. தங்கம்!

23rd Sep 2020 06:00 AM |   - மு.சுகாரா, திருவாடானை.

ADVERTISEMENT

 

தங்கம் நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. நம்மை அலங்கரிக்கும் ஆபரணமாக நம் வீட்டு விசேஷங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிடக்கூடிய ஆடம்பர பொருளாகவே தங்கம் பார்க்கப்படுகிறது. அந்த தங்கத்தை பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம்..

தங்கம் பெரும்பாலும் பூமிக்கடியில் ரேகைப் போல பாறைகளில் படிந்திருக்கும். பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி தங்கம் பாறைகளாக வெட்டி எடுக்கப்படுகிறது. அதிலிருந்து வேதியல் முறையில் தங்கத்தை மட்டும் பிரித்தெடுக்கிறார்கள். பின்பு மின் பகுப்பு முறையில் தங்கம் சுத்தம் செய்யப்படுகிறது.

உலகில் கிடைக்கக்கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்ரிக்காவில் வெட்டி எடுக்கப்படுபவையே. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கின்றது. தங்கம் "ஏயூ' என்ற  குறியீட்டால் குறிக்கப்படுகின்றது. காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகின்றது. 24 காரட் என்பது சுத்த தங்கமாகும். 22 காரட் தங்கமே ஆபரணங்கள் செய்ய பயன்படுகிறது. தங்கம் வெப்பத்தை நன்கு கடத்தவல்லது. 

ADVERTISEMENT

ஆதலாலே நுண்ணிய வேலைப்பாடுகளை தங்க ஆபரணங்களில் நாம் அதிகம் காணலாம்.

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலவாணியிலும் தங்கம் பெரும் பங்கு வகுகின்றது. இருப்பு வைத்துள்ள தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறு அந்த நாடு நாணயங்களை வெளியிடுகின்றன. நாட்டு பொருளாதாரத்திலும் பெரும் வினையாற்றுகிறது தங்கம். 

அதனாலேயே தங்கத்தின் மீதான கட்டுபாடுகள் கடுமையாக இருக்கின்றன. தங்கத்தை வாங்குவது, விற்பது, போன்ற பரிவர்த்தனைகளிலும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் அதிக கட்டுபாடுகளை விதித்துள்ளது அரசு. கச்சா எண்ணெய்க்கு அடுத்தப்படியாக தங்கம் இறக்குமதிக்கே அதிகளவு அந்நிய செலவாணி செலவிடப்படுகிறது.

மதிப்பு குறையாமல் மறுபயன்பாடு செய்யக் கூடிய ஒன்றாக தங்கம் இருக்கிறது, அன்றைய சந்தை விலைக்கே தங்கம் மதிப்பிடப்படுகிறது. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது.

உலகத்தில் உள்ள மொத்த தங்கத்தின் அளவில் இந்திய இல்லத்தரசிகளிடம் 11% தங்கம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT