மகளிர்மணி

முதன் முதலாக..

23rd Sep 2020 06:00 AM | - கோட்டாறு ஆ. கோலப்பன், நாகர்கோவில்.

ADVERTISEMENT

 

பச்சேந்திரி பால்:

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்தியப் பெண்மணி ( 1984) பத்மபூஷண் மற்றும் தேசிய அட்வெஞ்சர் விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.


தீபா மாலிக்:

ADVERTISEMENT

பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை ( ரியோ, 2016, ஷாட்புட்) ஈட்டி எறிதல், கார் பந்தயம் போன்றவற்றிலும் ஆர்வம் மிக்கவர்.


கேப்டன் ராதிகாமேனன்:

இந்தியாவின் முதல் மெர்ச்சென்ட் நேவி கேப்டன். இந்திய கடல் சார் நிறுவனத்தின் விருது பெற்றவர்.


பூலா சௌத்ரி:

ஐந்து கண்டங்களின் கடல் கால்வாய்களை நீந்திக் கடந்த உலகின் முதல் பெண்மணி. ஜிப்ரால்டர் ஜலசந்தி, டொரானியஸ் வளைகுடா, கேடலினா சானல், ராபின் தீவின் த்ரீ ஆங்கர் வளைகுடா ஆகியவை இவர் நீந்திக்கடந்த கேனல்கள்.


பக்தி ஷர்மா:

அண்டார்டிக்கில் ஓபன் ஸ்விம்மிங்கில் சாதனை புரிந்த முதல் ஆசியப் பெண். உலகின் மிக இளவயதுப் பெண். டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற்றவர்.


அருணிமா சின்ஹா:

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மாற்றுத் திறனாளி பெண்மணி. கால்களை இழந்த இவர் ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ, ஐரோப்பாவின் எல்பரஸ், அர்ஜென்டினாவின் அகோன்காருவா, இந்தோனோஷியாவின் கார்ஸ்டென்ஸ் பிரமிடு ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தவர்.

 

நீரு சௌதா:

கடல் எல்லை தாவா அமைப்பான "இட்லாஸ்' - இல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி. பதவிக்காலம் 2017- 2026 வரையிலான ஒன்பது ஆண்டுகள்.


சித்ரா ராமகிருஷ்ணா:

தேசிய பங்குச் சந்தையின் முதல் மேலாண்மை இயக்குநர். உலக தொழில்துறை ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

 

மேரி புன்னன் லூகோஸ்:

இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் திருவிதாங்கூர் சுகாதாரத் துறையின் தலைவராக பணியாற்றியவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.


ஆரதி சின்ஹா:

நீண்ட தொலைவு நீச்சல் வீராங்கனை. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண். பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய விளையாட்டு வீராங்கனை.


துர்காபாய் காமத்:

இந்திய திரைப்பட உலகின் முதல் நடிகை. இவரும், இவரது மகள் கமலாபாய் காமத்தும், 1913 -இல் வெளியான "மோகினி பஸ்மாசூர்' திரைப்படத்தில், தாதா சாகேப் பால் கே-வால் அறிமுகம் செய்யப்பட்டனர்.

 

சி.பி. முத்தம்மா:

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, வெளியறவு சேவைத் துறையில் பணியமர்ந்த முதல் பெண்மணி. 1970 -இல் ஹங்கேரிக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டவர்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT