மகளிர்மணி

2020- ஆசிய கல்வி விருது பெற்றவர்!

23rd Sep 2020 06:00 AM | -ரிஷி

ADVERTISEMENT

 

ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிய கல்வி மாநாட்டில் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களைக் கண்டறிந்து விருது வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கான விருதை சென்னை, ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள ஆல்பாபெட் பள்ளியின் நிறுவனரும் முதல்வருமாகிய கவிதா சராஃப் பெற்றுள்ளார். கற்பித்தலில் புதிய முயற்சிகளைக் கண்டறிந்து பணியாற்றி வருவதை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது:
""2009-ஆம் ஆண்டு இந்த ஆல்பாபெட் பள்ளி தொடங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் முழுமையான 1பி பள்ளிக் கூடமாக அங்கீகாரம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்தை வெளிக்கொணரும் வகையில், அவர்களிடையே கற்றுக் கொள்ளும் தாகத்தை ஏற்படுத்தும் கல்விச் சூழலை உருவாக்கித் தருவதே இப்பள்ளியின் முக்கிய குறிக்கோள் ஆகும். வகுப்பறை சூழல் முதல் கற்பிக்கும் வழி
முறைகள் வரை அவ்வப்போது புது மாற்றங்களைப் புகுத்தி வருகிறோம். அதனால் ஒவ்வொரு குழந்தையும் முழு தன்னம்பிக்கை கொண்ட, தன்னிச்சையாக இயங்க தக்க தன்மானம் உடையவர்களாக மிளிர்வார்கள் என்று நம்புகிறோம். தற்போது கிடைத்துள்ள இந்த விருது எங்களை உற்சாகப்படுத்தியதோடு, குழந்தைகளின் எதிர்கால கல்விமுறை குறித்து இன்னும் கூடுதல் கவனத்தைச் செலுத்தத் தூண்டியுள்ளது'' என்கிறார் கவிதா சாரஃப்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT