மகளிர்மணி

பவளமல்லியின் மருத்துவ குணங்கள்!

16th Sep 2020 12:00 AM | - லட்சுமி வாணி

ADVERTISEMENT


எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகளில், பவளமல்லியும் ஒன்று. உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளைக் கொண்ட பவளமல்லி சொரசொரப்பான இலைகளைக் கொண்டது. கொத்தானப் பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும், பூக்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை கொண்டது.

வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்கக் கூடியது. வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்கக் கூடியதாக பயன்படுகிறது.

காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கும் முறை

ADVERTISEMENT

செய்முறை: பவளமல்லி இலைகள் 5 எடுத்து சுத்தம் செய்துவிட்டு 1 டம்ளர் நீர்விட்டு சிறிது இஞ்சி தட்டிப் போடவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வந்தால், சிக்கன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் சரியாகும். சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கும் முறை

பவளமல்லி இலைகள் 5 எடுத்து நன்றாக சுத்தப்படுத்திவிட்டு 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் தேனுக்கு பதிலாக சீரகம் அல்லது மிளகு சேர்க்கலாம். இந்த தேநீரை காலை, மாலை என 50 மல்லி அளவுக்கு குடித்து வர மூட்டு வலி குணமாகும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT