மகளிர்மணி

சமையல் டிப்ஸ்...

16th Sep 2020 12:00 AM | -  எச்.சீதாலட்சுமி

ADVERTISEMENT

 

புடலங்காய், பீர்க்கங்காய்,  பரங்கிக்காய்  கூட்டு செய்யும்போது  ஒரு தேக்கரண்டி  பால் சேர்த்தால்  சுவையாக  இருக்கும்.

சூடான  தோசைக் கல்லில்  சிறிது  புளித்த  மோரும், உப்பும்  தடவித் தேய்த்தால்  பிசுபிசுப்பு  இருக்காது.

வாங்கி  வந்தவுடன்  காம்பை  கிள்ளிவிட்டால்  பச்சை மிளகாய்  அழுகாமல்  இருக்கும்.

ADVERTISEMENT

தேன்குழல்  மாவுடன் வேக வைத்த உருளையை  மசித்துச் சேர்த்து  பிசைந்து  செய்தால்  கரகரப்புடன் இருக்கும்.

சப்பாத்தி  காய்ந்து  போனால் அதில்  சிறிதளவு  தண்ணீர்  தெளித்து  பத்து விநாடி  மைக்ரோவேவ் அவனில்  வைத்து  சூடாக்கினால்  மென்மையாகிவிடும். 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT