மகளிர்மணி

ஒரு குழந்தைக்கு இரண்டு தாய்!

ஆ. கோ​லப்​பன்

சில பெண்களுக்குக் குழந்தை பிறப்பதில்லை. சிலருக்குப் பிறக்கும் குழந்தைகள் குறைபாட்டோடு பிறக்கின்றன. இதற்கெல்லாம் பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். அவற்றுள் முக்கியமானது தாயின் மரபணு தொடர்பானது. தாயின் மரபணுவிலுள்ள குறைபாடு காரணமாக மரபணு நோயுடன் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. மனித உடலிலுள்ள செல்களில் இருக்கும் மைட்டோ கான்ட்ரியாக்கள் உணவைச் சக்தியாக மாற்றி ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்கு எடுத்துச் செல்கின்றன.

சில பெண்களுக்கு செல்களிலுள்ள மைட்டோ கான்ட்ரியாக்களின் மரபணுக் குறைபாடு இருக்கும். அதன் காரணமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு சார்ந்த நோய் இருக்க வாய்ப்புண்டு.

இவ்வாறு மரபணு நோய் பரம்பரை பரம்பரையாகத் தொடர்வதை தடுக்க
முடியுமா?

பல்லாண்டு கால ஆராய்ச்சியின் பயனாக, மரபணுக் குறைபாடு அடுத்த தலைமுறைக்குத் தொடராமல் இருக்க ஒரு வழிமுறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மரபணுக் குறைபாடு இல்லாத ஒரு பெண்ணின் மைட்டோ கான்ட்ரியாவை எடுத்து, மரபணு குறைபாடுடைய பெண்ணின் கருமுட்டையுடன் இணைத்தால், அக்குழந்தை மரபணுக் குறைபாடின்றி நலமாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜோர்டன் நாட்டுப் பெண் ஒருவருக்கு இந்த முறையில் ஒரு குழந்தைப் பிறந்து நலமாக உள்ளது. அப்பெண்ணுக்கு மரபணுக் குறைபாடு உண்டு. அத்தகைய குறைபாடு இல்லாத வேறொரு பெண்ணிடமிருந்து மைட்டோ கான்ட்ரியா தானமாகப் பெறப்பட்டு, ஜோர்டான் நாட்டுப் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டது. அதன்பின், அப்பெண்ணின் கணவருடைய உயிரணுவைக் கருமுட்டையுடன் சேர்த்துக் கருத்தரிக்கும்படி செய்யப்பட்டது. தற்போது அக்குழந்தை மரபணுக் குறைபாடின்றி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. இந்தக் குழந்தைக்கு அப்பா ஒருவர், அம்மாக்கள் இருவர் அல்லவா?

இந்தச் சாதனையைச் செய்தவர்கள் அமெரிக்க மருத்துவர் குழுவினர் என்ற போதிலும், இப்பரிசோதனை முயற்சியை, பெற்றோர் மூவரையும் மெக்சிகோவுக்கு வரவழைத்து, அந்த நாட்டில் செய்து முடித்தனர். காரணம், மெக்சிகோ நாட்டில் தான் இது போன்று குழந்தை பெற்றுக் கொள்ளத் தடைச்சட்டம் எதுவும் இல்லை. வருங்காலத்தில் பரம்பரை நோய்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இம்முயற்சி முன்னோடியாக இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT