மகளிர்மணி

வீட்டு உபயோக குறிப்புகள்!

ஷோபனா தாசன்

சின்ன வெங்காயத்தை சமைக்கும் முன்பு சிறிது நேரம் பாலில் ஊற வைத்து பயன்படுத்தினால் சத்தும், சுவையும் அதிகரிக்கும்.

*முருங்கைக்கீரையும், வெங்காயமும் பொடியாக அரிந்து வைத்துக்கொண்டு, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கடலை மாவு மூன்றையும் சம அளவில் கலந்து, அத்துடன் முருங்கைக்கீரையையும், வெங்காயமும் சேர்த்து பிசைந்து போண்டாவாக செய்து சாப்பிட்டால், சுவையாக இருப்பதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கும் மருந்தாகவும் இருக்கும்.

*பேரீச்சம்பழ சுளைகளை நன்றாகக் கழுவி, தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து அப்படியே மிக்ஸியில் இட்டு அரைத்து ஏலக்காய் தூள், தேன் கலந்து சாப்பிடவும். இது ஓர் இரும்புச்சத்து மிக்க டானிக்காகும். எலும்பு வளர்ச்சி, நரம்பு உறுதி, மூளைக்கு வலிமை, இருதய பலம் பெற உதவுகிறது. கண் பார்வைக்கும் நன்மை அளிக்கிறது.

*குருமாவில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி மேலே தூவி உலர் திராட்சைப் பழம் சேர்த்தால் சுவை சூப்பராகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.

*எலுமிச்சை ஊறுகாய் போடும்போது தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டுகளாக்கி வதக்கி அதனுடன் சேர்த்தால் சுவை கூடும். எந்த ஊறுகாயும் கடுகு எண்ணெய் சேர்த்துச் செய்தால் கெட்டுப்போகாமல் இருக்கும்.

*பருப்புப் பொடியுடன் சிறிது கசகசாவையும் வறுத்து பொடி செய்து சேர்த்தால் குழம்புக்கூட்டு கெட்டியாக இருக்கும்.

*ஜவ்வரிசி கஞ்சியில் வெல்லம் போட்டு சாப்பிட்டால் குளிர்ச்சியாக பாயசம் போல இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT