மகளிர்மணி

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள்!

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

சர்க்கரை நோய் வந்துவிட்டால் ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைத்தான் அருந்தக் கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம். என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பதை இங்கு  பார்ப்போம்:

ஆப்பிள்

ஆப்பிளில் அதிகம் பைபர் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். இது பசியை அடக்குவதுடன் சர்க்கரை அளவில் மாற்றம் இல்லாமலும் இருக்க உதவுகிறது. ஒருவர் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அவருக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 35 சதவிகிதம் குறைய வாய்ப்பு உள்ளது.

பப்பாளி

பப்பாளியில் குறைவான குளுக்கோஸ், அதிகப்படியான கனிம சத்துகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. அதிகளவு இன்சுலின் சுரப்பையும் சீர்ப்படுத்தி விடுவதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
இதேபோன்று "பீச்' பழத்திலும் குறைவான குளுக்கோஸ், அதிகப்படியான கனிம சத்துகள் உள்ளது.

பெர்ரீ பழங்கள்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் சத்துகள் பெர்ரீ பழங்களில் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் அமிலம் நிரம்பிய ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளதால் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. முற்றிலும் ஒதுக்காமல் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளவும்.

கிவி 

சர்க்கரை நோயாளிகள் கிவி பழங்களை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். இது வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துகள் நிறைந்தது. ப்ளேவனாய்டு எனப்படும் பாலிபீனால் இதில் உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு கிவி பழம் சாப்பிடலாம்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம் அதிகமாக நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினம் ஒரு பழம் சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்ட கொய்யாப்பழ இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக்கி கிரீன் டீ போல அருந்தலாம்.

மாதுளை

மாதுளையில் உள்ள சின்ன சின்ன சுவைமிக்க கனிகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT