மகளிர்மணி

இந்தச் சேலை எப்படி இருக்கும்?:  புதிய மென்பொருள் அறிமுகம்

28th Oct 2020 06:00 AM | -  சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

 

தமிழ் பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்று  சேலை. எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், சேலையணிந்து செல்லும் பெண்களுக்கென்று ஒரு தனி மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்பதால் தான் சேலைகளைத் தேர்வு செய்வதற்காக பல கடைகளுக்கும் சென்று தேர்வு செய்வார்கள். விற்பனையாளர் சேலைகளை ஒவ்வொன்றாகப் பிரித்துக் காட்டும் போது பெண்களின் மனதில் ஒரு பேரலையே எழும். இதை எடுப்போமா, அதை எடுப்போமா என மனசும் அலை பாயும். ஒவ்வொரு சேலையையும் உடுத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தரம் எவ்வளவு முக்கியமோ அதைப் போல தேர்வு செய்யும் சேலையும், விலையும் மிகவும் முக்கியம். சில சேலைகளில் உள்பக்கம், வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதே போல சேலைகளில் பறவைகள், பூக்கள், மிருகங்கள், இலைகள், செடி, கொடிகள் என பல வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதிலும் இப்போது மணமக்கள் படத்தையும் சேலையில் இருக்கும் வகையில் வடிவமைக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஒரு புடவையை எடுத்தவுடன் இந்தப்புடவை நன்றாக இருக்கிறது. எனக்கு பொருத்தமாக இருக்கிறது என்று பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காகவும், சேலையைத் தேர்வு செய்வதற்காகவும் சேலை விற்பனையாளர்களுக்கென ஒரு நவீன தொழில் நுட்ப மென்பொருள் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. 

புதுப்புது டிசைன்களையும், வண்ணங்களையும் சேலைகளின் முகப்பு பகுதிகளையும், சேலையின் கரையோரங்களையும் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் மென்பொருளானது பெண்களிடம் தெளிவாக பெரிய அளவிலான கணினி திரையில் 3 டி வடிவில் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சேலையை முழுவதுமாகப் பிரித்து, அதை ஒரு பெண் உடுத்தினால் எப்படி இருக்குமோ அதே போல அந்தச் சேலையின் முழு வடிவத்தையும் கணினியில் இந்த மென்பொருள் காட்டும் என்பதே இதன் சிறப்பு. சேலையைப் பிரிக்காமலேயே அதன் மீதுள்ள பார்கோடு மூலம் ஸ்கேன் செய்தாலே சேலையின் முழு வடிவமும் கணினி திரைக்கு வந்து விடும் என்பது தான் மற்றும் ஒரு கூடுதல் சிறப்பு. இந்த மென்பொருள் அறிமுக விழா காஞ்சிபுரத்தில் அண்மையில் நடந்தது.சென்னை எக்மோரில் உள்ள கோடிம் சொல்யூசன்ஸ் அன் சர்வீசஸ் என்ற  நிறுவனம் தான் இந்த ஓய்னா(ஞவசஅ) எனும் மென்பொருளை தயாரித்திருக்கிறது.

ADVERTISEMENT

இத்தொழில் நுட்பம் 21-  ஆம் நூற்றாண்டின் புதுமை. ஜவுளிக்கடைக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். சேலைகளை வாங்க வருவோர்களிடம் விற்பனையாளர் ஏராளமான சேலைகளைப் பிரித்துக் காட்டி, அதை மீண்டும் கசங்காமலும், அழுக்காகமலும், மடித்து வைக்க வேண்டியது இருக்கும். இவையனைத்துக்கும் விடை கொடுக்கும் வகையில் இந்த ஒயினா மென்பொருள் ஜவுளிக்கடையில் இருந்தால், சேலைகளைப் பிரித்துக் காட்ட வேண்டியதோ அல்லது மடித்துக் காட்ட வேண்டிய தேவையோ இருக்காது. பெண்களும் தங்களுக்கு பிடித்த சேலைகளை உடனடியாக தேர்வு செய்து விடுவார்கள்.  டிசைன் பிடித்திருந்தால் கூடுதலாகவும் சேலைகளை ஆர்வத்துடன் வாங்குவார்கள். இது எப்படியென்றால் சேலையை பெண்ணிடம் காட்டும் போது அச்சேலையின் மீதுள்ள பார்கோடில் ஸ்கேன் செய்தால் அந்தப்பெண் அந்த குறிப்பிட்ட சேலையை உடுத்தி இருப்பது போன்றே கணினி திரையில் 3 டி வடிவில் முழுவடிவமும் தெரியும். இதே போல 100 சேலைகளாக இருந்தாலும், 1000 சேலைகளாக இருந்தாலும் சேலைகளைப் பிரித்துக் காட்டாôமல் உடனுக்குடன் ஸ்கேன் செய்து காட்டலாம். சேலை அழுக்காகாது, மடிப்பும் கலையாது, நேரமும் வீணாகாது, அது மட்டுமில்லாமல் சேலையின் தரம்,விலை, வடிவமைப்புகள் ஆகிய அனைத்துமே கணினி திரையில் நேரடியாக 3 டி வடிவில் காட்டப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தியும், மிக உன்னதமான ஒன்றை தேர்வு செய்த மனநிறைவும் ஏற்படும். சேலையும் அதிகமாக விற்பனையாகும். 

பட்டுப்புடவை விற்பனையாளர்கள், கூட்டுறவுச் சங்க பட்டு விற்பனை நிலையங்கள், சேலைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும்.  எங்களிடம் இந்த மென்பொருள் 5 வடிவங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது மேலும் ஒரு சிறப்பாகும். யாருக்கு எந்த மென்பொருள் தேவையோ அதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் 5 மென்பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது.

மென்பொருள்- 1- oyna bill board... 

கணினி திரையில் இருக்கும் மாடல் பெண் உருவ பொம்மையானது 100- க்கும் மேற்பட்ட சேலைகளை அணிந்தவாறு 3 டி வடிவில் சுற்றிக் கொண்டே இருக்கும். ஸ்கேன் செய்யும் சேலையின் வடிவமும் இந்த மாடல் பெண் உருவத்தின் மீது வந்து விடும். இதை கடையின் வெளியேவோ அல்லது கடைக்கு உட்புறமாகவோ கூட வைத்துக் கொள்ளலாம்.

மென்பொருள்- 2- oyna beam... 

எந்த சேலையை ஸ்கேன் செய்கிறோமோ அதன் முழு வடிவமும் கணினி திரையில் தெரியும் மாடல் பெண் உருவம் கட்டியிருக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்.

மென்பொருள்- 3- oyna boutique... 

கடையில் இருக்கும் அனைத்து சேலைகளையுமே ஏ.டி.எம்.இயந்திரம் போலவுள்ள இயந்திரத்தில் இருக்கும் கணினியில் மாடல் பெண் உருவத்தின் மீது ஒவ்வொன்றாக வரும். சேலை உடுத்தியிருக்கும் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டில் பார்ப்பது போன்ற அனைத்தையும் 3 டி வடிவில் காட்டும் மென்பொருள்.

மென்பொருள்- 4 - oyna online... 

கடையில் உள்ள சேலையின் வடிவம் முழுவதுமாக 3 டி வடிவத்தில் இணையத்திலேயே தெரியும். அதன் வடிவத்தை ஜூம் செய்து முன்பக்கம், பின்பக்கம் உட்பட  அனைத்தையும் பார்க்க முடியும். இணைய வழியில் சேலைகள் விற்பனை செய்ய இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும். வீட்டில் இருந்து கொண்டே பெண்கள் தேவையான சேலைகளை தேர்வு செய்து கொள்வார்கள்.

மென்பொருள் - 5-  oyna real...

சேலை வாங்க வந்த ஒரு பெண்ணை கடையில் ஒரு புகைப்படமாக எடுத்துக் கொண்டால் அந்தப் பெண்ணின் உருவம் கணினி திரைக்கு வந்துவிடும். பின்னர் கடையில் உள்ள எந்தச் சேலையை அந்தப் பெண் விரும்புகிறாரோ அந்தச் சேலையை பார்கோடு மூலம் ஸ்கேன் செய்தால் அச்சேலையை அந்தப் பெண்ணே அணிந்திருப்பது போன்று காட்டக்கூடிய அற்புத மென்பொருள்.
இத்தகைய நவீன தொழில் நுட்பத்தை தமிழக மகளிர்க்காகவும், ஜவுளி வணிகர்களுக்காகவும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நெசவுத் தொழிலின் உச்சகட்ட தொழில் நுட்பமான பட்டுத்துணியை உலகிற்கு தந்த பெருமைக்குரிய காஞ்சிபுரம் மண்ணில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறோம் எனவும் முகம்மது ரியாஸ் தெரிவித்தார்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT