மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

28th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT


நடிகைகளின் வெப்சீரிஸ்!

ராகவி, துர்கா, நீபா, சீதா உள்ளிட்ட 6 சின்னத்திரை நடிகைகள் இணைந்து நடிக்கும் வெப்சீரிஸ் "தந்துவிட்டேன் என்னை'. இந்த வெப்சீரிஸ் மராத்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடராகும். இதனை "சதுரன்' படத்தை இயக்கிய ராஜுவ் கே.பிரசாத் இயக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த வெப்சீரிஸில் அஸ்வின் நாயகனாகவும், ஹரிபிரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். பெண்கள் நிறைந்த ஒரு குடும்பத்தில் மருமகளாக வரும் பெண்ணால் ஏற்படும் பிரச்னைகளை சென்டிமென்ட், காமெடி கலந்து சொல்லும் தொடர் இது. இத்தனை சின்னத்திரை நடிகைகள் இணைந்து நடிக்கும் முதல் வெப்சீரிஸ் இதுதான்.

ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா!

பிக் பாஸ் 4- வது சீசனில் 16 போட்டியாளர்கள் முதல் நாளன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இந்த 16 பேரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெயர் விஜே அர்ச்சனா. சீனியர் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கிறார் என்று எதிர்பார்த்த நிலையில், முதல் நாள் வீட்டுக்குள் போனவர்களில் அர்ச்சனா இல்லை.

செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தும், அர்ச்சனாவும் இன்னொரு சேனலில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பதால், இந்த ஷோவில் கலந்து கொள்வதில் சில சிக்கல்கள் நீடித்து வந்தன. இந்நிலையில், சன் டிவி- யில் இருந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுத்தான் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அர்ச்சனா விஷயத்தில் பிக்பாஸ் ஷூட்டிங் தொடங்கும் கடைசி நிமிடம் வரை சிக்கல் நீடித்ததாலேயே, அர்ச்சனாவால் மற்ற போட்டியாளர்களைப் போல முதல் நாளில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அர்ச்சனா ஷோவில் கலந்து கொள்ள இருந்த சிக்கல்கள் நல்லபடியாகத் தீர்ந்து விட்டதால் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார் அர்ச்சனா.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT