மகளிர்மணி

சமையல் டிப்ஸ்...

28th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT


வெங்காயம்,  பூண்டை  தண்ணீரில்  தனித்தனியே  போட்டு பிறகு  உரித்தால்  சுலபமாக  உரிக்க  வரும்.  கண் எரிச்சல்  வராது.

பயிறு  வகைகளை  சிறிது  விளக்கெண்ணெய்  சேர்த்து  கிளறி வைத்தால்  பல நாட்கள்  வரை  புழுத்து போகாமலிருக்கும்.

கோதுமை  உள்ள  பாத்திரத்தில்  ஒரு கொத்து  வெந்தயக் கீரையைப்  போட்டு வைத்தால்  பூச்சிகள் அண்டாது.

புதிதாக  வாங்கிய அரிசி வடிக்கும் போது குழைந்தால்,  அரை மூடி  எலுமிச்சம் பழச்சாறுவிட்டு, இறக்கினால்  பொலபொலவென்று  இருக்கும்.

ADVERTISEMENT

பக்கோடா  மொறு மொறுப்பாக இருக்க  மாவைக் கலக்கும்போது சிறிதளவு  நெய்யும்,  உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால்  போதும்.

ரவா லட்டு செய்யும்போது  கையில்  நெய்யைத் தடவிக் கொண்டு  உருண்டைப்பிடிக்க, உருண்டை  சுலபமாக  வரும்.  வாசனையாகவும்  இருக்கும்.

ஆர்.கே. லிங்கேசன்,  மேலகிருஷ்ணன்புதூர். 

 

தேங்காயை சரிபாதியாக  உடைக்க  அதனை  உடைக்கும் முன்பு தண்ணீரில் நனைத்து  பின்னர்  உடைத்தால் எளிதில் சரிபாதியாக  உடையும்.

எலுமிச்சை பழங்களை  உப்பு ஜாடியில்   போட்டு வைத்தால் பழங்களை  எப்போதும்  புதிதாகவே  காணப்படும் நிறைய  சாறும் கிடைக்கும்.

ஊறுகாயை  எப்போதும்  கண்ணாடி பாட்டிகளில்  போட்டு வைக்கவும்.  அவ்வாறு செய்தால் ஊறுகாய்  கெடாமல் இருக்கும். 

உருளைக்கிழங்கு  வேக வைத்து தோலை தூக்கி எறியாமல்  முகம் பார்க்கும் கண்ணாடியைத் துடைத்தால்  பளிச்சென்று  இருக்கும். 

-  வசந்தா மாரிமுத்து
 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT