மகளிர்மணி

சமையல் சமையல்!

21st Oct 2020 06:00 AM | - ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

ADVERTISEMENT

நேந்திரம் பழப் பாயசம்

தேவையானவை:
நேந்திரம் பழம் - 3
வெல்லம் - 300 கிராம்
தேங்காய் - 1
முந்திரி, திராட்சை - 10
நெய் - 2 தேக்கரண்டி


செய்முறை: நேந்திரம் பழங்களைத் தோல் எடுத்து துண்டு செய்து சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாக வேக வைக்க வேண்டும். கொதிக்கும் நீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி இந்தக் கரைசலை நேந்திரம் பழ விழுதில் சேர்த்து நன்றாக இரண்டும் சேரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். தேங்காயை இரண்டு பால் எடுத்து இரண்டாம் பாலை அடுப்பில் இருக்கும் கலவையில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதித்து வற்றும்போது முதல் தேங்காய் பாலைச் சேர்த்துக் கிளற வேண்டும். இறக்கும் சமயத்தில் சிறிதளவு முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்து பாயசத்தில் போட்டு இறக்க வேண்டும்.

 

அவல் லட்டு


தேவையானவை:
அவல் - 100 கிராம்
பொட்டுக்கடலை - 50 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
தேங்காய் - 1 மூடி
ஏலக்காய் - 4
முந்திரிப் பருப்பு - 10
கிஸ்மிஸ் - 10
நெய் - 50 கிராம்

ADVERTISEMENT

செய்முறை: அவல், பொட்டுக்கடலை இரண்டையும் மாவாக்க வேண்டும். சர்க்கரையையும் மாவாக்கி சலித்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரி, கிஸ்மிஸ்ûஸ நெய்விட்டு வறுத்து மாவான பொடிகள், சர்க்கரைப்பொடி, ஏலப்பொடி வறுத்த தேங்காய் சேர்த்து கலக்க வேண்டும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் மாவு கலவையில் ஊற்றி கலந்து சிறுசிறு லட்டுகளாகப் பிடிக்க வேண்டும்.
 

முந்திரி பருப்பு லட்டு

 

தேவையானவை:
முந்திரிப் பருப்பு - 500 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
ஏலக்காய் - 10
நெய் - 25 கிராம்

செய்முறை: முந்திரி பருப்பை கொஞ்சம் நெய்விட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையைப் பொடி செய்து கொள்ள வேண்டும். முந்திரியை ரவை போல் திரித்து அதை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு சர்க்கரைப் பொடி, ஏலப்பொடி, முந்திரிப் பொடி எல்லாவற்றையும் கலந்து கொண்டு நெய்யைவிட்டு கலந்து சிறுசிறு லட்டுகளாக பிடிக்க வேண்டும்.
 

 

கம்பு லட்டு


தேவையானவை:
கம்பு மாவு - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
முந்திரி - 10
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 50 கிராம்

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து கம்பு மாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்க வேண்டும். முந்திரியை நெய்யில் வறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, பொடி செய்த சர்க்கரை ஏலப்பொடி, முந்திரி சேர்த்து கலந்து நெய்யைச் சூடாக்கி அதில் ஊற்றி சிறு சிறு லட்டுகளாக உருட்டி பிடிக்க வேண்டும்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT