மகளிர்மணி

சின்னத்திரை  மின்னல்கள்!

14th Oct 2020 06:00 AM | -ஸ்ரீ

ADVERTISEMENT

 

சின்னத்திரையில் இனியா!


"வாகை சூடவா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இனியா. அதனைத் தொடர்ந்து "சென்னையில் ஒருநாள்', "மௌனகுரு', "அம்மாவின் கைபேசி' எனப் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இருந்தாலும் தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புகள் வராததால், மலையாள திரையுலகப் பக்கம் தனது கவனத்தை திருப்பிய இனியா, ஏராளமான மலையாளப் படங்களில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது தமிழ் சின்னத்திரையில் களம் காண வருகிறார் இனியா. விரைவில், முன்னனி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ள தொடர் ஒன்றில் வில்லியாக நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்தத் தொடரில் "நந்தினி', "சாக்லெட்' தொடர்களில் நடித்த ராகுல் நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக நித்யாதாஸ் மற்றும் நிமிஷிகா, அஷிதா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இதற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறதாம்.

ADVERTISEMENT

 

புதிய ஜோடி!


கரோனா பொதுமுடக்கம் காரணமாக, நிறுத்தப்பட்ட பல தொடர்கள் மீண்டும் தொடங்காமல் பாதியிலேயே முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு சில தொடர்கள் மட்டுமே மீண்டும் பழைய ஆதரவோடு சூடுபிடிக்க தொடங்கின. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரும் ஒன்று. கூட்டுக் குடும்ப கலாட்டா, சென்டிமெண்ட், காதல் என கலந்துகட்டி கலகலப்பாக இருப்பதால், இந்த தொடருக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு அதிகம். அதிலும், கதிர் - முல்லையின் காதல் காட்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில், மற்றுமொரு புது ஜோடி இதில் இணையவுள்ளது. ஆம், இக்குடும்பத்தின் கடைசி மகனான கண்ணன் கேரக்டருக்கு இதுவரை ஜோடி இல்லாமல் இருந்தது. தற்போது, அவருக்கு ஜோடியாக சத்யசாய் கிருஷ்ணாவை கொண்டு வருகிறார்கள். இவர், ஏற்கெனவே "அழகிய தமிழ் மகள்', "ராஜாமகள்' போன்ற தொடர்களில் நடித்தவர். இதன்மூலம், கதிர்-முல்லை ஜோடிப் போலவே இந்த ஜோடியும் பேசப்படும் என நம்புகிறார்களாம் இத்தொடரின் குழுவினர்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT