மகளிர்மணி

கொலு டிப்ஸ்..

DIN


கொலுவில் மலை அமைக்கும்போதே சிறிய தகரடப்பாவை மணலில் புதைத்து, அதிலிருந்து சாம்பிராணி புகை வரும்படியாக அமைத்தால் மலையிலிருந்து பனிப்புகை வருவது போன்று பார்க்க ரம்மியமாக இருக்கும்.

எளிதில் உடையக் கூடிய ஒட்டு வேலைப்பாடுகளுடைய பொம்மைகளை காட்டன் பட்ஸை வாங்கி வந்து தூசி துடைத்தால் மிகச்சிறிய இடுக்குகளைக் கூட எளிதில் துடைத்து பளிச்சென்று ஆக்கிவிடலாம். அதுபோன்று பொம்மைகளில் விரிசல் ஏற்பட்டிருந்தால் அந்த பொம்மைக்கு ஏற்ப தலை பாகமெனில் சிறிய தொப்பி அணிவிக்கலாம். கால்பாகம் உடைந்திருந்தால் ஸ்லோகன் ஒட்டலாம்.

கொலுவுக்கு மலை அமைத்ததும் மலையில் ஆங்காங்கே சிறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

நவராத்திரி நாட்களில் கோலம் இட்டு சுற்றிலும் செம்மண் இட்டபின் (இது வெள்ளை மாவு கோலத்திற்கு மட்டுமே பொருந்தும்) நடுவில் சிறிது மஞ்சள் குங்குமம் மற்றும் சிறிது உதிர்த்த பூக்களை வைக்க. பார்க்க ரம்மியமாக இருக்கும்.

நவராத்திரி பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை தம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.

நவராத்திரி சமயத்தில் மாலையில் வாங்கும் மல்லிகைப் பூ மறு தினத்திற்கும் வாடாமல் இருக்க ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதியதாக, மணமுடன் இருக்கும்.

கொலு வைக்கிறவர்கள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை இதில் புகுத்தக் கூடாது. பாரபட்சமின்றி, அழைக்கப்படுகின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு, தாம்பூலம், வரவேற்பு இருத்தல் வேண்டும்.

கொலுவில் புல் தரை அமைக்க, பச்சைநிற வயர்களைச் சிறிது சிறிதாக வெட்டி மணலில் நிறுத்தி வைக்கலாம்.

நம் வீட்டில் வேலை செய்யும் பெண்கள், சமைக்க வருபவர்களையும் கண்டிப்பாக அழைத்து மஞ்சள் குங்குமத்துடன் பணம் வைத்துக் கொடுங்கள்.

கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும், அன்பை பெருக்கவும் பாரம்பரிய கலாசாரத்தை கடைப்பிடிக்கவும் உரியதாக இருக்க வேண்டும். வெறும் பகட்டுக்காக மட்டும் கொலு வைக்கக் கூடாது மனித நேயம் வளர உதவியாக இருக்க வேண்டும்.

நவராத்திரி சமயத்தில் காலையில் விளக்கேற்றி வைத்து ஒன்பது நாட்களிலும் தேவி மகாத்மியம், சௌந்தர்ய லஹறி லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி என ஸ்தோத்திர பாராயணங்கள் தினந்தோறும் நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் வீட்டிற்கும் நாட்டிற்கும் சுபிட்சங்கள் ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT