மகளிர்மணி

ஆற்றில் கிடைத்த அதிர்ஷ்டம்!

14th Oct 2020 06:00 AM | - ரிஷி

ADVERTISEMENT


மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தெற்கு பர்கானா மாவட்டத்தின் சுந்தரவன பகுதியில் வசிப்பவர் புஷ்பாகர் என்ற மூதாட்டி. இவர் சாகர் தீவுப் பகுதியில் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவர்.

சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் மீன் பிடிக்கச் சென்றபோது, மிகப்பெரிய மீன் ஒன்று ஆற்றில் மிதந்து வருவதைப் பார்த்தார். அதை கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்து வந்தார். இந்த மீன் அவரை லட்சாதிபதி ஆக்கப்போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

கரைக்கு வந்ததும், இதைக் கண்ட கிராமவாசி ஒருவர், "இது மிகவும் அரியவகையான "போலா' எனும் கடல் மீன் வகையைச் சேர்ந்தது. அந்த வழியாக சென்ற கப்பல் மோதி இந்த மீன் இறந்திருக்க கூடும், இறந்த நிலையில் கிடைத்ததால், இதனை உண்பதற்கு பயன்படுத்த முடியாது. இருப்பினும் மருத்துவ தேவைகளுக்கு இது பயன்படும். அதனால், சந்தைக்கு எடுத்து சென்று விற்றால் நல்ல விலைக்கு போகும்' என்று தெரிவித்துள்ளார்.

இதனால், அந்த மீனை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உள்ளூர் சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார் புஷ்பா . 52 கிலோ எடை கொண்டிருந்த அந்தமீன் ஒரு கிலோ 6,200 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு அவருக்கு 3 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

புஷ்பாகரிடம் கிடைத்த அந்த மீன் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் நல்ல விலைக்கு விற்பனையாகியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

""நீண்ட காலமாக, பொருளாதார நெருக்கடியால் தவித்து வந்த எனக்கு இந்த மீன் மூலம் இவ்வளவு பெரிய தொகை கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என தெரிவித்துள்ளார் புஷ்பாகர்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT