மகளிர்மணி

தேங்காய் சிரட்டையில்  கலைவண்ணம்!

ஆர். தர்மலிங்கம்

பொது முடக்கத்தால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த ஓய்வுப் பொழுதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி. வீட்டில் சமையல் செய்து தூக்கி வீசப்படும் தேங்காய் சிரட்டையில் விநாயகர், "டீ கப்', வாத்து, எறும்பு, பூச்செடி போன்ற கலை நயமிக்க பொருள்களை செய்து அதனை தனது நண்பர்களுக்கு விற்பனை செய்து வருவாயும் ஈட்டி வருகிறார்.

திருப்பூர், பெரிச்சிபாளையம், ஊர்கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர். எஸ்.ஸ்வேதா (19). இவர் திருப்பூர், முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் அப்பேரல் ஃபேஷன் டிசைனிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக கல்லூரிக்கு கடந்த மார்ச் மாதம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை உபயோகமாகப் பயன்படுத்த எண்ணியபோது "யூ டியூப்' சேனலில் தேங்காய் சிரட்டையில் கலைப் பொருள்கள் செய்வதைப் பார்த்துள்ளார். இதையடுத்து, வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்திய தேங்காய்ச் சிரட்டைகளைக் கொண்டு நாமும் ஏன் கலைப் பொருள்களை செய்யக் கூடாது என நினைத்தார்.

விநாயகர், கப்பல், பூச்செடி, வாத்து, பெரிய எறும்பு, "டீ கப்' என 40-க்கும் மேற்பட்ட பொருள்களை உருவாக்கியுள்ளார். இதில் ஒரு பொருளை உருவாக்க 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே ஆகிறதாம் ஸ்வேதாவுக்கு. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

""எனக்கு சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் இருந்து வந்தது. தற்போது வீட்டில் இருக்கும் நேரத்தில் கலைப் பொருள்களை செய்ய திட்டமிட்டேன். அப்போது கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்று கலைப் பொருள்கள் உருவாக்குவதைத் தெரிந்துகொண்டேன். நாமும் தேங்காய்ச் சிரட்டையில் கலைப் பொருள்களை செய்து விற்பனை செய்யலாம் என தோன்றியது.

தற்போது வரையில் 40-க்கும் மேற்பட்ட பொருள்களை செய்து அதனை நண்பர்களிடம் விற்பனை செய்து ரூ.5 ஆயிரம் வருவாயும் ஈட்டியுள்ளேன். இதில், டீ கப் ஒன்று ரூ.100-க்கும், கப்பல், பூச்செடி, வாத்து போன்ற பொருள்களை ரூ.400-க்கும் விற்பனை செய்து வருகிறேன்.

வரும் காலத்தில் திருப்பூரில் "கிஃப்ட் ஷாப்' ஒன்றைத் திறந்து எனது கைவண்ணத்தில் செய்யப்பட்ட பொருள்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதே எனது இலக்கு'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT