மகளிர்மணி

எதிர்காலத்தில் பாடகியாக வர வேண்டும்! 

7th Oct 2020 06:00 AM | - ஸ்ரீ

ADVERTISEMENT

சின்னத்திரை தொடரில் நடிக்க தொடங்கிய சிறிது நாட்களிலேயே பெரியளவில் தனக்கென ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் சித்தி 2 தொடரில் வெண்பாவாக நடித்துவரும் ப்ரீத்தி ஷர்மா.
"கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை' என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் தொலைக்காட்சியில் நுழைந்தார் இவர். அந்த நிகழ்ச்சியின் மூலம் கலர்ஸ் தமிழ் சேனலில் "திருமணம்' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சீரியல் நாயகியானார்.
அந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே "சித்தி-2'வில் இருந்து வாய்ப்பு வர, அதன்பிறகு அவரால் "திருமணம்' தொடரில் தொடர முடியவில்லை அதிலிருந்து விலகி, "சித்தி 2'-வில் பிஸியானார். அதில் சாரதா டீச்சரின் பாசமிகு மகளாக நடித்து வருகிறார்.
19 வயதாகும் ப்ரீத்தி, அடிப்படையில் வட இந்தியப் பெண். பூர்வீகம் லக்னௌ. ஆனால் ப்ரீத்தியின் குடும்பம் கோயம்புத்தூரில் செட்டில் ஆகிவிட்டது. பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ப்ரீத்தி. எதிர்காலத்தில் நல்ல பாடகியாக வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம்.
தொடரில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது டிக்டாக்கில் வித விதமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவரது
பதிவுகளுக்காகவே இவருக்கு ரசிகர் வட்டம் இருந்தது. ஆனால் தற்போது "டிக் டாக்'கை தடை செய்து விட்டார்கள். இருந்தாலும் சளைக்காமல் விதவிதமான ஃபோட்டோக்களால் தனதுஇன்ஸ்டாகிராமை நிரப்பி வருகிறார் ப்ரீத்தி ஷர்மா.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT