மகளிர்மணி

கைகளை பராமரிக்க...

7th Oct 2020 06:00 AM | - காசியம்மாள்

ADVERTISEMENT

 

கைகளை பாதுகாக்க அவ்வப்போது கை நகங்களில் அழுக்கை நீக்க வேண்டும். அல்லது நகங்களை வெட்டி சுத்தமாக செய்து கொள்ள வேண்டும்.
நகங்களை வெட்டி சுத்தம் செய்த பிறகு நகங்களின் மீது தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
மாதம் ஒரு முறை கைகளுக்கு மெனிக்யூர் செய்யலாம். இதனால் கைகளில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும்.
ஓர் அகலமான டப்பாவில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதில் சாஃப்ட்டான ஷாம்பு அல்லது பேபி ஷாம்பு கலந்து விடவும். அதனுடன் எலுமிச்சைப்பழத்தின் சாறு, 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் கைகளை 10 நிமிடம் இந்த நீரில் வைத்து இருந்து பின்னர் நன்றாக தேய்த்து கழுவுங்கள். இதன் மூலம் கைகள் ஈரப்பதத்துடன் இருப்பதுடன் கைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி ஆரோக்கியமாக இருக்கும்.
வெயிலில் அலையும் வேலை செய்பவர்களுக்கு முகங்களை விட கைகள் கருமையாக இருக்கும். இந்த கருமையைப் போக்க, 1 கிண்ணத்தில் 2 தேக்கரண்டி காபித் தூள், 2 தேக்கரண்டி சர்க்கரை, 3 தேக்கரண்டி தயிர் எடுத்து நன்றாக கலந்து கைகளில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், கைகளை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்து வர, கைகளில் உள்ள கருமை நீங்கி கைகள் பளீச்சென்று இருக்கும்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT