மகளிர்மணி

இளநீரும் - தேனும்!

7th Oct 2020 06:00 AM |  - ஏ.எஸ்.கோவிந்தராஜன்

ADVERTISEMENT

 


நமது உடலில் உள்ள நீர் சத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும், நாம் தேடி அருந்தும் பானம் இளநீர்.  அதிலும், இளநீருடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். 
ஆம், தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் இளநீரில் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வர, அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் வைட்டமின் ஏ, உடலில் உள்ள செல்களை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும்.

இளநீரில் தேன் கலந்து அருந்துவதால் குடலியக்கம் சீராகும். அதுமட்டுமின்றி வயிற்றில் ஏற்படும் அமிலசுரப்பு குறைக்கப்பட்டு, செரிமானப் பிரச்னகள், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். மேலும், உடலினுள் உள்ள அழற்சி குறைவதுடன், நோயினை ஏற்படுத்தும் தொற்றுக்கிருமிகள் அழிக்கப்படும்.

இளநீர், தேன் சேர்ந்த கலவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவினை குறைப்பதால், ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த இயற்கை பானத்தை குடிப்பதால், சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
இளநீர் மற்றும் தேன் சேர்ந்த கலவையில் உள்ள ஏராளமான வைட்டமின்களும், கனிமச்சத்துகளும், உடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. 

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT