மகளிர்மணி

மகிழ்ச்சியான  ஆத்மா

7th Oct 2020 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT

 

பிரபல நடிகை, குடும்பத்தலைவி, தாய் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளினி என பலவித பொறுப்புகளை ஏற்றாலும், திறமையுடன் வாழ்க்கையை நடத்தி வரும் பூஜாபேடி, தற்போது தன்னுடைய எதிர்கால கணவர் மானெக் என்பவருடன் கோவாவில் வசித்து வருகிறார். பொது முடக்கம் காரணமாக எங்கும் செல்ல முடியாததால் "ஹேப்பிúஸôல்' என்ற அமைப்பின் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து தேவையான தகவல்களை பரிந்துரை செய்து வருகிறார். இது குறித்த தன்னுடைய கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:

""ஒருவருடைய வாழ்க்கையில் என்ன வெல்லாம் நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ அவை நடந்தே தீரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய 20-ஆவது வயதில் அம்மாவையும், சகோதரனையும் இழந்தேன். சில மாதங்களுக்குள் என்னுடைய பாட்டியும் இறந்து போனார். என்னுடைய வளர்ப்பு நாயும் இறந்துவிட்டது. சில ஆண்டுகளுக்குள் திருமண வாழ்க்கையும் முறிந்தது. இது என்னுடைய கதை மட்டுமல்ல, இது போன்ற சம்பவங்கள் பலரது வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு எப்படி முன்னேறுகிறார்கள் என்பது தான் முக்கியம்.

இந்த பொதுமுடக்கத்தின்போது பெரும்பாலான மக்கள், பழைய சம்பவங்களை நினைத்தபடி, இன்றைய வாழ்க்கைக்கு எது முக்கியம் என்பதை மறுமதிப்பீடு செய்திருக்கலாம். பழைய உறவுகளை புதுப்பித்து இருக்கலாம் என்று நான் நினைத்ததுண்டு, தற்போதைய சூழ்நிலையில் வாழ்க்கையையும், செய்யும் பணிகளையும் சரிசமமாக செயல்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சிலர் இந்த சூழ்நிலையை எப்படி சாதகமாக்கிக் கொண்டனர் என்பதுதான் முக்கியம்.

ADVERTISEMENT

என்னைப் பொருத்தவரை இந்த பொதுமுடக்கத்தின்போது என்னுடைய ஆரோக்கியத்தையும், உடல் நலனையும் பராமரிக்க ஹேப்பிúஸôல் என்ற அமைப்பை துவக்கி, தினமும் 14- 15 மணி நேரம் செலவழித்தேன். இது மற்ற தயாரிப்புகளுக்கான போட்டி அல்ல, இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும பாதுகாப்புக்குத் தேவையான எண்ணெய், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சாதனங்கள், தகவல் குறிப்புகள் போன்றவைகளை அறிமுகப்படுத்துவதற்காக துவங்கப்பட்டதாகும். கூடவே தியானம், மூச்சுப் பயிற்சி. நரம்பு தளர்வுக்கான சிகிச்சை, ஜூம்பா வகுப்புகள், ஸ்பா மற்றும் ஜிம் போன்றவைகளுடன், ஆன்மிகம், சுற்றுச் சூழலை ஒட்டிய பயணங்கள் என பலவித திட்டங்களையும் அறிமுகப்படுத்தினேன்.

எனக்கு தற்போது 50 வயதாகிறது. இந்த நீண்ட பயணத்தில் பலவித சாதனங்களை பயன்படுத்தியும், பரிசோதித்தும் பார்த்துள்ளேன். இன்று மார்க்கெட்டில் ஏராளமான பிராண்டுகள் கிடைக்கின்றன. சிறுவயதில் என்னை இமாச்சலப் பிரதேசத்தில் போடிங் ஸ்கூல், ஒன்றில் என்னுடைய அம்மா சேர்ந்திருந்தார். அது குளிர் பிரதேசம் என்பதால் என் சரும பாதுகாப்புக்காக கிளிசரின் மற்றும் பன்னீரை கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தனுப்புவார். வளர்ந்த பின்னர் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும்படி கூறினார்.

என்னுடைய மகள் ஆலயா சருமத்துக்கும், என்சருமத்துக்கும் வித்தியாசம் இருப்பதால், நான் பயன்படுத்தும் பொருட்கள் அவளுக்கு ஒத்து வராததால், அவளுக்கு தேவையானவைகளை வாங்க அனுமதித்துள்ளேன். சில சமயங்களில் நான் பயன்படுத்தும் பொருட்கள் சரியில்லை என்று கூறுவாள். அவளைப் பொருத்தவரை அவள் சருமத்திற்கேற்றவைகளை மட்டுமே பயன்படுத்துவாள். மும்பையில் வசித்தபோது கடற்கரையோர குடியிருப்பில் இருந்தேன். 2016- ஆம் ஆண்டு கோவா வந்தவுடன் வீட்டைச் சுற்றி மைதானம், நீச்சல் குளம், மரங்கள் மூலிகைச் செடிகள், பசுமையான சுற்றுச் சூழல் என வசதியாக வாழ்கிறேன்.

17 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றது முதல் என்னுடைய மகிழ்ச்சியையும், வெளிப்படையான உறவுகளையும் என் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு சிலரே என்னுடன் நெருக்கமாக உள்ளனர். மானெக் என்னுடைய வாழ்க்கையில் வந்தவுடன், ஒருமுறை என்னுடைய மகள் ஆலயா என்னிடம் ""அம்மா, நான் சொல்வதை கேள், உன்னிடமிருந்து பிரிந்து போன அப்பா, வேறொரு திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தந்தையுமாகிவிட்டார். அவரைப் போல் நீயும் திருமணம் செய்து கொள்வது நல்லது'' என்று கூறினாள்.

மானெக்கை சந்திக்கும் வரை நான், மறுமணத்தைப் பற்றி நினைத்ததில்லை. திருமணபந்தம் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களாலோ, பேப்பரில் கையெழுத்துப் போடுவதாலோ ஏற்படுவதல்ல. இருவரது மணங்களின் சங்கமம்தான் வாழ்க்கை. நான் ஏன் மீண்டும் படங்களில் நடிப்பதில்லை என்று பலர் கேட்பதுண்டு. நான் ஒரு கவர்ச்சி நடிகையாகத்தான் அறிமுகமானேன். திருமணமானவுடன் கவர்ச்சியாக நடிப்பது சரியல்ல, ஒருவருடைய மனைவியானவுடன், இந்த உலகத்தின் கண்ணோட்டம் மாறுபடுமென்பதால், தங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்துவதில் கவனம் தேவைப்படுகிறது.

திருமணத்தைப் பற்றியோ, நடிப்பது பற்றியோ என்ன செய்யலாம் என்பது பற்றியோ என் மனசாட்சிப்படி முடி வெடுக்க எனக்கு உரிமை உண்டு. கடவுளால் படைக்கப்பட்ட நாம், பிறந்ததற்கான பலனை முழுமையாக அனுபவித்தாக வேண்டும்.

மகிழ்ச்சி, துன்பம் இவைகள் மூலம் நல்ல அனுபவங்களை பெறுவதோடு, சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை மாற்றிக் கொள்வது நல்லது. உங்களது தேவைகளுக்கு முதலிடம் கொடுங்கள், மற்றவை தானாகவே உங்களைத் தேடி வரும்'' என்கிறார் பூஜாபேடி.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT